search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் நார்வே"

    உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன.
    லண்டன்:

    சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் அமோகமாக இருப்பது தெரியவந்தது.

    அதன்மூலம் உலகில் மிக மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் மேற்கண்ட டென்மார்க் உள்ளிட்ட 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை 10-க்கு தலா 7.5 புள்ளிகள் பெற்றுள்ளன.

    இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு 6.9 புள்ளிகளும், இங்கிலாந்துக்கு 6.7 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

    வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்கின்றனர். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். அரசும் நல்ல திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றுகிறது. அதன்மூலமே அந்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகின்றனர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
    ×