search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி தலைவர்"

    கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #CanadaParliament #JagmeetSingh
    ஒட்டாவா:

    கனடாவில் கடந்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் (வயது 40) வெற்றிபெற்றார்.

    இதையடுத்து அவருக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் கனடா நாடாளு மன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை பெற்று, கனடா அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    தலையில் ‘டர்பன்’ அணிந்து நாடாளுமன்றத்திற்குள் ஜக்மீத் சிங் நுழைந்தபோது, அவை உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  #CanadaParliament #JagmeetSingh 
    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். #ShehbazSharif #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது.

    இந்த வழக்கில் அவர் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் வக்கீல் வாரிஸ் அலி ஜான்ஜூவா வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அதை நீதிபதி சையத் நஜ்முல் ஹசன் நிராகரித்தார். ஷாபாஸ் ஷெரீப்பை வரும் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் காட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    முன்னதாக அவரது கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  #ShehbazSharif #Pakistan 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். #ShahbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவராக ஷாபாஸ் ஷரீப்பை நியமனம் செய்ய 111 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என பாராளுமன்ற சபாநாயகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைவில் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
    ×