என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எம்எல்ஏக்கள் வெளியேறினர்
நீங்கள் தேடியது "எம்எல்ஏக்கள் வெளியேறினர்"
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற பட்டுள்ளதால், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து வெளியேறினர். #KarnatakaCMRace
பெங்களூரு:
கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.
இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து நேற்றிரவு வெளியேறினர். அவர்களில் சிலர் கேரளா மாநிலம் கொச்சிக்கும், சிலர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகருக்கும் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KarnatakaCMRace
×

X