search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் பைக்"

    உலகின் பிரபல ரேஸ் பைக் நிறுவனமான டுகாட்டி எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி வரும் நிலையில், இந்த மாடல் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. #Ducati #ElectricBike



    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பேட்டரி வாகனங்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளன. அந்த வரிசையில் டுகாட்டி நிறுவனம் புதிதாக சேர்ந்திருக்கிறது. 

    ரேஸ் பைக்குகளை மட்டுமே தயாரித்து இளைஞர்களை கவர்ந்த டுகாட்டி நிறுவனம் பேட்டரி வாகனங்களையும் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்காலமே இனி பேட்டரி வாகனங்களுக்குத்தான் என்று டுகாடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிளாடியோ டொமெனிகாலி சமீபத்தில் தெரிவித்தார்.



    ஏற்கனவே 2017-ம் ஆண்டு டுகாட்டி நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான் நிர்வாக இயக்குநர் எட்வர்டு லோதே, தங்கள் நிறுவனம் பேட்டரியில் ஓடும் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

    இதற்கென மிலான் பாலிடெக்னிக் பள்ளியுடன் இணைந்து பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. பேட்டரி வாகனத்திற்காக பவர் டிரைன் உருவாக்கப்பட்டு வாகன உருவாக்கத்தில் தீவிரம் காட்டியது. அதன் பின் பல்வேறு காரணங்களால் நிறுவனம் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. 

    தற்சமயம் இந்நிறுவனம் பேட்டரி வாகனம் தயாரிக்கும் எனர்ஜிகா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால் விரைவிலேயே டுகாட்டி பேட்டரி வாகனம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். 
    கவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. #Kawasaki #ElectricBike
     


    கவாசகி நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இ-மோட்டார்சைக்கிளை உருவாக்க காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது. தற்சமயம் ஏழு ஆண்டுகளுக்கு பின் கவாசகி நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க காப்புரிமை பெற்றிருக்கிறது.

    இணையத்தில் லீக் ஆகியிருக்கும் காப்புரிமைகளில் புதிய வாகனம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டார், கிளட்ச் அசெம்ப்ளி, அவுட்புட் ஷாஃப்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் இந்த வாகனத்தில் கவாசகி கியர்பாக்ஸ் வழங்கலாம் என தெரிகிறது.

    இதுபோன்ற அமைப்பு காரணமாக குறைந்தளவு டார்க் வெளிப்படுத்தக்கூடிய சிறிய மோட்டாரை வழங்க முடியும். இதன் மூலம் பேட்டரியின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகப்படுத்த முடியும். மேலும் இவ்வாறு செய்ய பெரிய பேட்டரியும் தேவைப்படாது.



    இத்துடன் காப்புரிமைகளில் ரேம்-ஏர் இன்டக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதே அமைப்பு கவாசகியின் ஸ்போர்ட்ஸ்பைக்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் ஏர்-இன்டேக் ஹெட்லேம்ப்பின் கீழ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் பேட்டரியின் அருகில் குளிர்ந்த காற்று போகச் செய்யும்.

    முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்பைக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டுகாடி தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். உலகம் முழுக்க காற்று மாசு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகனங்களில் கனவனம் செலுத்த துவங்கிவிட்டன. 

    அந்த வரிசையில் கவாசகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் வடிவத்தை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

    புகைப்படம் நன்றி: Rushlane | Visor Down
    ×