search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவுகணை"

    • இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
    • தொழில்நுட்பக் கோளாறால் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    பெங்களூரு:

    இரு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன் 24 ஆய்வுக்கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த இரு விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

    இதையடுத்து, இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணி ஜனவரி 9-ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக திட்டமிட்டபடி விண்கலன்கள் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி பெற்றது.
    • இதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் பிருத்வி, ஆகாஷ் மற்றும் அக்னி உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    சமீப காலமாக நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அடுத்த தலைமுறை உபகரணங்களை தயாரிப்பதில் தற்போது டி.ஆர்.டி.ஓ. கவனம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையே, டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 1,500 கி.மீ. தூரம் இலக்கைச் சென்று தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரை அருகே உள்ள சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஏவுகணை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஏவுகணை வளாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. மூத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா ஒரு பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்காவுக்கு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது
    • இந்திய நேரப்படி இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது

    உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.

    சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.

     

    அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    • இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
    • 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.

    சீனா, சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.

    இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.

    • இஸ்ரேலிய ஏவுகணை வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
    • சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

    லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா, ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கிய நேரம், சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

    நேரலையில், அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவின் படி, நேரலையில் பௌதயா பேசிக் கொண்டிருந்த போது அவரது வீட்டை ஏவுகணை ஒன்று தாக்கியது. திடீர் தாக்குதலை அடுத்து அலறிய பௌதயா வீடியோவை துண்டித்ததாக தெரிகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நேரலையில், இருக்கும் போது தாக்குதலில் சிக்கிய செய்தியாளருக்கு என்ன ஆனது என எக்ஸ் தளத்தில் பலரும் கேள்விகள் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கு பின் சிறிது நேரம் கழித்து ஆன்லைன் வந்த பௌதயா ஃபாளோயர்களுக்கு பதில் அளித்தார்.

    அதில், "தொலைபேசியில் அழைத்தவர்கள், குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், செக்-இன் செய்தவர்கள் மற்றும் ஏதோ உணர்ச்சியை உணர்ந்த அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன், கடவுள் மற்றும் அவர் எங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி. எதிர்ப்புக்கு ஆதரவாக எங்கள் ஊடக கடமையைத் தொடர நாங்கள் திரும்புகிறோம், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி," " என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



    • வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என அதிகாரிகள் கூறினர்.
    • அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா செயல்படுகிறது.

    சியோல்:

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தனது அணுசக்தியை முழுமையாக தயார்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக வடகொரிய அதிபர் உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
    • மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

     

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை 7.10 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்தர்துங்காவில் இருக்க கூடிய ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேன்ஜில் இன்று காலை 7.10 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் செயற்கை கோளையோ, விண்கலங்களையோ சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும் ஏவுகணையை இஸ்ரோ பரிசோதனை செய்யகூடிய வகையில் இந்த திட்டம் என்பது மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    'புஷ்பக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது விமானப்படையுடைய ஃபிலிப் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வதாக நடைபெற்ற சோனையில் இந்த ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் மீண்டும் பயன்படுத்த கூடிய ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • கடந்த நான்கு நாட்களில் உக்ரைனை தலைநகரை நோக்கி ரஷியா ஏவுகணை தாக்குதல்.
    • ரஷியா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு.

    உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு அதிகப்படியாக சேதம் ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மூன்று மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன தலைநகர் கீவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    இரு நாடுகளுக்கும் மிக அருகில் உள்ளது போலந்து. உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து நாட்டின் வான்வழியில் நுழைந்ததாக போலந்து குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், எஃப்16 போர் விமானத்தை செயல்படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டை தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளது.

    • இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் சரக்கு கப்பல்கள் குறிவைக்கப்படும்- ஹவுதி
    • அமெரிக்கா- இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

    மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.

    • கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும்.
    • தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது.

    நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெயில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும்.

    கடுகின் தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. நமக்கு கேட்கும் `பட்... பட்...' என்கிற சத்தமும்கூட, ஆவியாகி வெளியே வரும் நீர், எண்ணெயில் படுவதால்தான் உருவாகிறது. சூடான எண்ணெயில் நீர்த்துளிகள் படும்போது சத்தம் வரும் அல்லவா, அதுபோலத்தான்.

    ஆனால், எல்லா கடுகும் பாத்திரத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதில்லை. ஒன்றிரண்டு கடுகுகள் வெடித்தாலும், அவை பாதியாக பிய்ந்து போவதில்லை. உருண்டையாகத்தான் இருக்கின்றன. ஆக, கடுகுக்குள் இருந்த நீராவி வெளியே வரும்போது, கடுகை மொத்தமாகச் சிதைத்து விடுவதில்லை. ஒரு சிறு துவாரத்தை இட்டுக்கொண்டு நீராவி வெளியேறுகிறது.

    எனவே, எந்த கடுகு எவ்வளவு பெரிய துவாரம் இட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே கடுகு வெளியேறித் தப்பிக்குமா, இல்லை நம் உணவுத் தட்டுக்கு வருமா? என்பது முடிவாகிறது.

    கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறும் நீராவியால் தனக்கு கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னேறி கடுகு மேலே பறக்கும். கடுகுக்குள் இருக்கும் நீராவி முழுவதும் வெளியேறிவிட்டால், கடுகுக்கு மேற்கொண்டு உந்துவிசை கிடைக்காது. அப்போது கடுகு கீழே விழுந்துவிடும். இவ்வளவு சாகசம் செய்யும் ஒரு கடுகின் எடை மிக மிக குறைவானதுதான்.

    சின்னச்சிறு கடுகுக்கும், வானைத் தொடும் ஏவுகணைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையை பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது.

    ஆக, சூடான எண்ணெயில் பட்டதும் வெடித்துப் பறக்கும் கடுகும், ஏவுகணையும் ஒரே வகையைச் சேர்ந்தவைதாம். இதுதான் கடுகுக்குள் உள்ளே இருக்கும் ரகசியம். இன்னும் சொல்வதென்றால் குட்டிக் குட்டி உருண்டை வடிவ ஏவுகணைகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், என்று கடுகை நினைத்து பெருமிதமும் கொள்ளலாம்.

    • சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் ‘சர்மட்’ கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது.
    • குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்' கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

    இந்நிலையில் சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தி உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்தது. இது தொடர்பாக விண்வெளி நிறுவன பொது இயக்குனர் யூரி போரிசோவ் கூறும்போது, சர்மட் ஏவுகணைகள் தனது பணியை செய்வதற்கான கடமையில் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன சர்மட் ஏவுகணைகள் ராணுவ படையில் இணைக்கப்பட்டு உள்ளது. அவை பன்டுத்துவதற்கு தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என்றார். இது ஆர்.36 ஏவுகணைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சர்மட் ஏவுகணை முதன் முதலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. சுமார் 116 அடி நீளமும், 220 டன் எடையும் கொண்டதாகும். ஒரு ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகங்கள் கூறும்போது, சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கை அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும், ரஷியா தனது அணுசக்தி தாக்குதல் விருப்பம் இன்னும் மேஜையில் உள்ளது என்ற செய்தியை அனுப்புகிறது என்று தெரிவித்தது.

    ஏற்கனவே சர்மட் ஏவுகணை குறித்து ரஷியா அதிபர் புதின் கூறும்போது, இந்த ஏவுகணைகள், ரஷியாவுடன் போரில் ஈடுபடும் முன் உலகையும் எதிரிகளையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நவீன தொழில்நுட்பங்களை கொண்ட சர்மட் ஏவுகணை அதிபயங்கரமானவை என்று கருதப்படுகிறது.

    தற்போது சர்மட் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    ×