search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட் மறுப்பு"

    சபரிமலைக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SabarimalaTemple #Rehna
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.



    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. #SabarimalaTemple #Rehna
    விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு தொடர்பான நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GaneshChaturthi #GaneshIdols #HC
    சென்னை:

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், பூஜைகள் முடிந்த பிறகு சிலைகளை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறைப்படி, விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் அளித்தது. சிலைகள் வைக்கும் இடத்துக்கான மின் இணைப்பை வீடுகள், கடைகளில் பெற ஆட்சேபமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்க கூடாது என்றும் அவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். பின்னர் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நிபந்தனைகள் வகுக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

    விதிகளை எதிர்த்து மற்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நாளை நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GaneshChaturthi #GaneshIdols #HC
    ×