search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி ஒருநாள் தரவரிசை"

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 453 ரன்கள் குவித்து 28 புள்ளிகளுடன் முன்னிலையுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி. #ViratKohli #ICCRankings
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று சதங்களுடன் 453 ரன்கள் குவித்தார். இதனால் ஒருநாள் போட்டி தரவரிசைக்கான 15 புள்ளிகள் பெற்ற மொத்தம் 899 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 389 ரன்கள் குவித்ததால் 29 புள்ளிகள் பெற்றார்.



    ஜோ ரூட் 807 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், டேவிட் வார்னர் 803 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாபர் ஆசம் 798 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ராஸ் டெய்லர் 785 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    கேன் வில்லியம்சன் 778 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், குயின்டான் டி காக் 769 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், தவான் 767 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், டு பிளிசிஸ் 753 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
    ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார்கள். #ICC #ViratKohli
    ஐசிசி வாரந்தோறும் அணி மற்றும் வீரர்கள் தரவரிசையை வெளியிடும். இந்த வாரம் முதல் நாளான இன்று தரவரிசையை வெளியிட்டது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டனும், தலைசிறந்த வீரரும் ஆன விராட் கோலி தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். ஹிட்மேன் ரோகித் சர்மா 2-வது இடத்தில் நீடிக்கிறார். இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் 5-வது இடத்தில் உள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் 3-வது இடத்தில் உள்ளார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்திலும், சாஹல் 11-வது இடத்திலும் உள்ளனர்.

    அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

    ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
    இந்தியாவிற்கு எதிராக இரண்டு சதம் விளாசிய ஜோ ரூட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCODIRankings
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    முதல் போட்டியில் சரியாக விளையாடாத ஜோ ரூட் 2-வது மற்றும் 3-வது போட்டியில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் 216 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியில் நாட்அவுட் என்பதால் சராசரி 216 ஆகும். இதன்மூலம் 818 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    இந்திய அணி கேப்டன் 75, 45 மற்றும் 71 ரன்கள் அடித்தார். சராசரி 63.66 ஆகும். இதன்மூலம் முதன்முறையாக ஒருநாள் தொடரில் 911 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். ஓராண்டு தடை பெற்றுள்ள வார்னர் 5-வது இடத்திற்கும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 6-வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர். ரோகித் சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.
    ×