என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐடியா செல்லுலார்
நீங்கள் தேடியது "ஐடியா செல்லுலார்"
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் வருடம் முழுக்க தினசரி டேட்டா, அன்லமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் சிட்டிபேங்க் உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுக்க டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கியது. தற்சமயம் இந்த சலுகை வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
வோடபோன் சிட்டிபேங்க் சலுகை ஏற்கனவே ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டதை போன்ற பலன்களை வழங்குகிறது. அதன்படி பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஜூலை 31, 2019 வரை வழங்கப்படுகிறது. இச்சலுகை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
புதிய சலுகையை பெற பயனர்கள் ஏற்கனவே வோடபோன் பிரீபெயிட் சேவையை பயன்படுத்த வேண்டும். பின் வோடபோனின் சலுகைகள் இடம்பெற்றிருக்கும் வலைதளம் சென்று புதிதாக கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு வாங்கியதும், குறைந்தபட்சம் ரூ.4000 பயன்படுத்தினால் இந்த சலுகையை பெறலாம்.
மேலே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று கிரெடிட் வாங்கிய முதல் 30 நாட்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த தொகையை ஒரே சமயமும் பயன்படுத்தலாம், சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.
வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone #offers
ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்தபின் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் வோடபோன் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் வோடபோன் நிறுவனம் அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,699 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ஒரு வருட வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் கிடைக்கும். ஒரு வருட வேலிடிட்டி என்பதால் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளை போன்றே ரூ.1,699 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.
இதுதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.
வோடபோனின் புதிய சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,699 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஒருவருட சலுகை தவிர வோடபோன் மூன்று புதிய டாப்-அப் ரீசார்ஜ்களை அறிவித்தது. ரூ.50 விலையில் அறிவிக்கப்பட்ட முதல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39.7 டாக்டைம் வழங்கப்படுகிறது. மற்ற இருசலுகைகள் ரூ.100 மற்றும் ரூ.500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு சலுகைகளிலும் முழுமையான டாக்டைம் வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.154 பிரீபெயிட் சலுகையில் ஆறு மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. #Vodafone #offers
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Idea
ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஐடியா அறிவித்து இருக்கும் புதிய சலுகை விலை ரூ.295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
42 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஐடியா செல்லுலார் புதிய பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால் அளவு தினசரி அடிப்படையில் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும், வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா என்றும், சலுகையில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், 10 கே.பி. டேட்டா கட்டணம் 4 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.299 விலையில் வழங்கும் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையில் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. சில வட்டாரங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.299 சலுகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் ரூ.279 விலையில் வழங்கும் சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதிக வேலிடிட்டி வழங்கும் விலை குறைந்த சலுகையாக இது இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
எனினும் ஐடியா சலுகையை போன்று வோடபோன் சலுகையிலும் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பயனர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. #Idea #Offers
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் ஐடியா செல்லுலார் மூன்று புதிய சலுகைகளை ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 விலையில் அறிவித்துள்ளது. மூன்று புதிய சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது.
ஐடியா செல்லுலார் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.209 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.479 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.529 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஐடியா அறிவித்து இருக்கும் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், அதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஐடியாவின் மூன்று புதிய சலுகைகளிலும் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் கால் போன்றே நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தியதும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் புதிய சலுகை ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படுகிறது. #Idea #offer
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள ஐடியா செல்லுலார் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படுகின்றன.
ஐடியா செல்லுலார் ரூ.149 புதிய சலுகையில் மொத்தம் 33 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் வேலிடிட்டி காலத்தில் பயனர்கள் 100 வெவ்வேறு எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
ஐடியா தற்சமயம் அறிவித்திருக்கும் ரூ.149 சலுகை இதே விலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளன. ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ பயனர்கள் இந்த சலுகையை 42 நாட்களுக்கு பெற முடியும்.
ஏர்டெல் வழங்கும் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா தற்சமயம் அறிவித்து இருக்கும் புதிய சலுகை முதற்கட்டமாக கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
முன்னதாக வோடபோன் சார்பில் ஆறு புதிய காம்போ ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட புதிய சலுகைகளில் டாக்டைம், டேட்டா மற்றும் ரேட் கட் பலன்கள் 28 நாட்கள் துவங்கி அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன.
ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதை பெற என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
ஐடியா செல்லுலார் நிறுவனம் கடந்த மாதம் ஆறு வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது பின் கூடுதலாக ஒன்பது வட்டாரங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது. இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் தற்சமயம் ஐடியா வோல்ட்இ சேவைகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் வோல்ட்இ சேவைகளை மேற்கொள்வோருக்கு 10 ஜிபி டேட்டாவும், நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா என மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், அதிவேக கால் செட்டப் நேரம், 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் வோல்ட்இ சேவையில் அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான கட்டணம் பயனர் தேர்வு செய்திருக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.
இத்துடன் 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் கிடைக்காத இடத்தில் பயனர்கள் தானாக 2ஜி/3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும். தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டும் ஐடியா வோல்ட்இ வழங்கப்படும் நிலையில் விரைவில் பல்வேறு நிறுவன சாதனங்களில் வோல்ட்இ வழங்கப்பட இருக்கிறது.
ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ அம்சம் தானாக ஆக்டிவேட் செய்யப்படும் நிலையில், இவ்வாறு ஆக்டிவேட் ஆகாத பட்சத்தில் பயனர்கள் ‘ACT VOLTE’ என டைப் செய்து 12345 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வோல்ட்இ சேவையை பயன்படுத்துவோர் தங்களது ஐடியா 4ஜி சிம் கார்டை ஸ்மார்ட்போனின் சிம் ஸ்லாட் 1-இல் போட வேண்டும்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும்.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பலத்த போட்டி காரணமாக இலவச வாயஸ் கால்கள் வழங்கப்படும் சூழலில் இருநிறுவனங்கள் இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
ஐடியா நிறுவனம் சார்பில் தேவையான வங்கி உத்தரவாதம், வோடபோன் இந்தியா கடன்களை ஏற்றுக்கொண்டதும், இருநிறுவனங்கள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X