என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு
நீங்கள் தேடியது "ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு"
42 உயிர்களை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #HyderabadTwinBombBlastVerdict
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேர் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேர் என மொத்தம் 42 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நம்பள்ளி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது. தீர்ப்பு வெளியாக இருப்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TwinBlast #HyderabadTwinBombBlastCase ##HyderabadTwinBombBlastVerdict
×

X