search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்"

    புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. #MasoodAzhar
    நியூயார்க்:

    புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

    இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.



    இந்த நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

    மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #MasoodAzhar #UNSecurityCouncil #PulwamaAttack

    அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    நியூயார்க்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    டிரம்ப் - கிம் சந்திப்பின் போது 15 பேர் கொண்ட வடகொரியா அதிகாரிகள் குழுவும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பரிசீலித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    ×