search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிபெருக்கி"

    • அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
    • பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.

    கோவை:

    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்கள் என்னென்ன ஊருக்கு செல்லும், எந்த வழித்தடம் வழியாக செல்லும் என்ற விவரங்கள் பக்கவாட்டு பகுதியில் எழுதப்பட்டுஇருக்கும். ஆனாலும் எழுத படிக்க தெரியாதவர்கள் கிராமங்களில் இருந்து வருவதால், அவர்களுக்கு பஸ்கள் எந்த ஊர்களுக்கு செல்கின்றன என்பது பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இல்லை.

    எனவே கண்டக்டர்கள் அந்த பஸ் செல்லும் ஊர்களின் பெயரை உரத்த குரலில் கூறி பயணிகளை அழைப்பார்கள். இந்த நடைமுறை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.

    அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

    இருப்பினும் பஸ் நிலையத்திற்குள் வண்டி நுழைந்ததும் கண்டக்டர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவை மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் குளிர்சாதன மற்றும் சொகுசு பஸ்களில் சம்பந்தப்பட்ட வாகனம் செல்லும் வழித்தடம் மற்றும் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி வழங்கப்பட்டு உள்ளது.

    சிறிய ரேடியோ போல இருக்கும் மேற்கண்ட சாதனம் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதில் சம்பந்தப்பட்ட பஸ் செல்லும் வழித்தடம், எந்தெந்த ஊர்களில் நிற்கும் என்பவை பற்றிய விவரங்கள் குரல் வழியில் பதிவு செய்யப்படுகின்றன.

    பஸ் நிலையங்களுக்குள் வண்டி வந்ததும் மேற்கண்ட கருவியை வண்டியின் முன்பகுதியில் கண்டக்டர்கள் எடுத்து வைத்து சுவிட்சை போட்டு விடுகின்றனர்.

    அதன்பிறகு தானாகவே கருவியில் இருந்து குரல்வழிப்பதிவு ஒலிபரப்பாக தொடங்கி விடுகிறது. சேலம், ஈரோடு, கரூர் என பஸ் இயக்கப்படும் ஊர்களின் பெயரை மாறி, மாறி ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறது.

    இதன் மூலம் பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.

    அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் நடைமுறைக்கு வந்து உள்ள இந்த குரல் ஒலிபரப்பு சாதனம், கண்டக்டர்களின் பணிப்பளுவை குறைக்கும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து கோவை அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:-

    பஸ்சில் ஏறுவோருக்கு டிக்கெட் போடுவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, பயணிகளை பத்திரமாக ஏற்றி இறக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் ஏகப்பட்ட சத்தம்-கூச்சல்களுக்கு மத்தியில் ஊர்கள் பெயரைக் கூறி பயணிகளை கூவி கூவி அழைத்து வந்தோம். இதனால் எங்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. தற்போது தானியங்கி மைக் ஒலிபரப்பு சாதனம் எங்களின் பணிப்பளுவை வெகுவாக குறைத்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. பயணிகளும் மகிழ்ச்சியுடன் பஸ்சில் ஏறி பயணிக்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
    • தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் இதாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மசூதிகளில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

    • வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
    • கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.

    சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.

    இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார். 

    • புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
    • கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பிரித்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகிலேயே அரசின் பல்துறை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் இந்த பகுதியில் பந்தல் அமைப்பாளர்கள் கொண்டு வந்த நாற்காலிகள் மற்றும் கார்பெட், கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது. இந்த பொருட்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என பொருள் உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தேவனாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த பொருட்களை எடுத்து இருக்கலாம் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தில் இதுகுறித்து போலீசார் தெரிவித்தனர். மீனவ பஞ்சாயத்தார் இதுகுறித்து இன்று ஆட்டோ ஒன்றில் ஒலிபெருக்கி கட்டி தெரு தெருவாக அந்த பொருட்களை யாராவது எடுத்து இருந்தால் அதே இடத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    நமது ஊர் கடற்கரையில் புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் இருந்து காணாமல் போன பொருட்களை எடுத்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் சென்று வைத்து விடுங்கள் . போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் ஊர் நிர்வாகம் இதற்கு பொறுப்பாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தனர்.

    • மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லடம் நால்ரோடு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை -திருச்சி ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக செல்ல 45 வினாடிகளும், அதேபோல கிழக்கிலிருந்து மேற்காக செல்ல 45 வினாடிகளும் அனைத்து வாகனங்களும் செல்ல அமைக்கப்பட்டு இருந்தது.

    அதுபோல மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பெரிய நகரங்களில் உள்ளது போல் முதல் 25 வினாடிகளுக்கு நேராக செல்லும் வாகனங்களுக்கும், கடைசி 20 வினாடிகளுக்கு பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களும் செல்ல சிக்னல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்துவதற்காக நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் சிக்னல் குறித்து அறிவித்து வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்:- பெரிய நகரங்களில் உள்ளது போல் தற்பொழுது பல்லடத்திலும் சிக்னல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேராகச் செல்லும் வாகனங்களுக்கு 25 வினாடிகளும், பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு 20 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை - திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்கள் 2 வழிகளிலும் ஒரே நேரத்தில் செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த புதிய நடைமுறையை பின்பற்றி பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பேருந்து பயணிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    • பயணிகள் சிரமமின்றி பேருந்து ஏறுவதற்கு முயற்சி செய்த நடத்துனர் ஈஸ்வரமூர்த்தி , தனது சொந்த செலவில் ஒலிபெருக்கியை வாங்கி பஸ்சின் முன் வைத்துள்ளார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் காலை 9.50 மணிக்கு கோபியில் இருந்து திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தப் பேருந்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார். பேருந்து நிலையம் என்றாலே அதிக அளவில் பேருந்து ஹாரன் சத்தம் இருக்கும், மேலும் கூட்ட நெரிசலும் காணப்படும்.

    இதனால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அதிக அளவில் சத்தம் போட்டு தங்களது வழித்தடத்தை சொன்னாலும் பலருக்கு தெரியாமல் போகிறது.

    இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பயணிகள் சிரமமின்றி பேருந்து ஏறுவதற்கு முயற்சி செய்த நடத்துனர் ஈஸ்வரமூர்த்தி , தனது சொந்த செலவில் ஒலிபெருக்கியை வாங்கி அதை பஸ்சின் முன் வைத்துள்ளார்.

    அந்த ஒலிபெருக்கியில் கோபி, திருப்பூர், மதுரை பைபாஸ், தூத்துக்குடி, திருச்செந்தூர் என்று தெளிவாக உச்சரிக்கப்படுவதால் பேருந்து பயணிகள் பலருக்கும் இது உதவும் வகையில் உள்ளது. நடத்துனரின் இத்தகைய செயலுக்கு பேருந்து பயணிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.
    • 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

    கோவை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.

    பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை கலெக்டரை நேரில் சந்தித்து அளித்தனர். இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஒலிபெருக்கியை பறித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வேடப்பட்டி சத்யா நகரை சேர்ந்த ஜெகநாதன்(வயது55) என்பதும், ஆடு மேய்க்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    அவர் தனது வீட்டில் 15 ஆடுகளை வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடுகளில் 5 ஆடுகளை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 பேர்விஷம் வைத்து கொன்றனர்.

    இதுகுறித்து ஜெகநாதன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனக்கு இழப்பீடு வழங்க கோரி 2019-ம் ஆண்டு முதல் பல தடவை மனு அளித்தும் இழப்பீடு வழங்காததால் தனது கோரிக்கை கலெக்டருக்கு கேட்கும் வகையில் ஒலிபெருக்கியுடன் வந்ததாக தெரிவித்தார்.

    • பாதயாத்திரை செல்ல முயன்ற லெனினிஸ்டு நிர்வாகிகள்
    • வழிப்பாட்டு கூரை உச்சியிலும், மரங்களிலும் ஒலி பெருக்கி அமைக்க கூடாது என கோஷம்

    கன்னியாகுமரி:

    வழிப்பாட்டு தலங்களில் ஒலி சப்தம் அளவை கட்டுப்படுத்த வலியுறுத்தி குளச்சலில் பாதயாத்திரை செல்வதாக குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனி னிஸ்டு (மக்கள் ஜனநாயகம்) நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

    அதன்படி மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மேரி ஸ்டெல்லா, பரமே ஸ்வரன், தனேஷ் மற்றும் தனபால், கிரேசி, அமலா, ஜோசப், வக்கீல் குமார் ஆகியோர் குளச்சல் காம ராஜர் பஸ் ஸ்டாண்டு அருகே கூடினர். அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி வழிப்பாட்டு தலங்களில் 45 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது, வழிப்பாட்டு கூரை உச்சியிலும், மரங்களிலும் ஒலி பெருக்கி அமைக்க கூடாது என கோஷமிட்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி ரீத்தாபுரம் நோக்கி பாதயாத்திரை செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாது காப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    ×