search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓம்சக்தி சேகர்"

    தி.மு.க.வுக்கு பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட எந்த தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது என்று ஓம்சக்தி சேகர் பேசினார். #dmk #parliamentelection


    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்.தன் வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்தார். சத்துணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின்னர் அம்மா இந்த இயக்கத்தை தன் கண் இமை போல காத்து வந்தார். இப்போது கழக ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதைக்குரிய ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தி.மு.க. வழக்கு போட்டு தடுக்க முயன்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி சாதனை செய்துள்ளார்கள். பொங்கல் பரிசுடன் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்கி சாதனை செய்த ஓரே அரசு அ.தி.மு.க அரசு ஆகும்.

    ஆனால் புதுவை மாநில அரசு மக்களுக்கு எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை. புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மாநில அந்தஸ்து பெற எந்த முயற்சியும் எடுக்காமல் இப்போது அரசியல் லாபம் கருதி மத்தியில் ஆட்சி அமைத்த 2 மாதங்களில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பொய்பிரசாரம் செய்து வருகின்றனர்.

    புதுவையில் உள்ள தொழிற்சாலைகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு இப்போது தொழிற் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் கூறுவது ஏமாற்று வேலை.

    தி.மு.க.வுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட எந்த தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது கழக கூட்டணி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.  #dmk #parliamentelection

    புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு முயற்சிக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமை தாங்கி கொடியேற்றி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக ஒதியன்சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலை, 100 அடி சாலையில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஓம் சக்தி சேகர் கூறியதாவது:-

    புதுவையில் தி.மு.க.வின் துணையோடு ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்ற வில்லை. நாள் தோறும் கவர்னர் மீது குற்றம் சுமத்தி வரும் அரசியல் செய்து வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும் தினந்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், மக்கள் வீதியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே உடனடியாக உள்துறை அமைச்சகம் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு கோரிக்கை வைத்துள்ளது.

    அரசு பல் மருத்துவ கல்லூரியை புதுவை அரசு நடத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, அரசு ஊழியர்களுக்கு சம்பள பற்றாக்குறை, அடிப்படை திட்டங்களை கூட நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களில் அரசு தவித்து வருகிறது.

    மாநில இணை செயலாளர் பேராசிரியர் ராமதாஸ், மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள், மாநில மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, ஊசுடு செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வெரோனிக்கா, நந்தன், பழனி, ஞானபூங்கோதை, தொகுதி செயலாளர்கள் மணி, மணவாளன், சக்கரவர்த்தி, கணேசன், சுபதேவ் சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் சதா, சேகர், மாநில பிற அணி விக்னேஷ் கவிநாதன், மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் காவலர் தேர்வு வயது வரம்பை கவர்னர் கிரண்பேடி உயர்த்த வேண்டும் என்று ஓம்சக்தி சேகர் கடிதம் எழுதியுள்ளார்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தற்போது நடைபெற உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் வயது வரம்பு தொடர்பாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் கோரிக்கையினை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    புதுவை அரசின் காவல் துறை 390 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து வர வேற்றுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கான வயது வரம்பு தற்போது 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய பணி நியமன விதியில் 22 ஆக குறைத்து இருப்பது புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    புதுவையில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு அதை விட அரசு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. எனவே தற்போது நிலவி வரும் வேலை வாய்ப்பற்ற அசாதாரண சூழ்நிலையில், இந்த தேர்வுக்கான வயது உச்ச வரம்பினை மாற்றம் செய்வது என்பது தவிர்க்க முடியாதது.

    எனவே புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் நலன் கருதி பணிநியமன விதியில் மாற்றம் செய்ய கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பரிதாபமான நிலையினையும் கருத்தில் கொண்டு தற்போது உள்ள பணிநியமன விதியை மாற்றி வயது உச்ச வரம்பினை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓம் சக்தி சேகர் கூறியுள்ளார்.

    தமிழக அரசு பற்றி முதல்- அமைச்சர் நாராயணசாமி தவறான தகவல்களை பரப்புகிறார் என்று முன்னாள் எல்எல்ஏ ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு தூர் வாராததால் காரைக்கால் கடைமடைக்கு காவிரிநீர் வர தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு வடிகட்டிய பொய்யை நாராயணசாமி தெரிவித்துள்ளதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    காவிரி நீருக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய உண்மையான மக்கள் தலைவியாக விளங்கிய அம்மாவின் எண்ணப்படி சிறப்பான முறையில் செயல்படும் தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க. செயல் தலைவரின் கருத்தை புதுவையில் வழிமொழியும் தி.மு.க. செய்தி தொடர்பாளர் போல் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார்.

    நாராயணசாமி தனது பதவியை காப்பாற்ற தமிழக அரசை குறை கூறுவதன் மூலம் தி.மு.க.வை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார்.

    முதலில் தனது நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள வாய்க்கால்களை மழை காலத்துக்கு முன்பு தூர்வாரி விட்டு பிறகு மற்ற மாநிலங்களை பற்றி பேச வேண்டும்.

    இதுபோன்று பல குறைகளை தன்னிடம் வைத்துக்கொண்டுள்ள நாராயணசாமி அ.தி.மு.க. அரசை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்சி தலைமையின் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×