search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகளில் அதிகாரிகள் ஆய்வு"

    கோத்தகிரியில் உள்ள கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
    கோத்தகிரி:

    குன்னூர் தொழிலாளர் இணை ஆணையர் தங்கவேலு உத்தரவின்படி உதவி ஆணையர் கிரிராஜன் அறிவுரையின் பேரில் குன்னூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் மல்லீஸ்வரன், கோத்தகிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தராசு மற்றும் எடைகற்களுக்கு உரிய முறையில் முத்தரையிடப்பட்டுள்ளதா? குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்களா? எனவும் சோதனை செய்தனர். மேலும் முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடைகற்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தராசு மற்றும் எடைகற்களுக்கு ஏ.பி.சி.டி என நான்கு காலாண்டுகளில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து தொழிலாளர் துறை அதிகாரிகளால் முத்திரையிடப்படுகிறது. முத்திரையிட தவறியவர்கள் குன்னூர் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று முத்திரையிடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடைகற்களை பயன்படுத்துவதும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் சட்டப்படி குற்றம். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். கோத்தகிரி நகரில் உள்ள சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 
    ×