search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைசி இடம்"

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.
    விழுப்புரம்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 91.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாவட்ட அளவில் விருதுநகர் மாவட்டம் 97.5 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 96.35 சதவீதம் பெற்று 2-வது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 96.18 சதவீதம் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் 95.88 சதவீதம் பெற்று 4-வது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 95.72 சதவீதம் பெற்று 5-வது இடத்தையும், சிவகங்கை மாவட்டம் 95.60 சதவீதம் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 39 ஆயிரத்து 539 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 19 ஆயிரத்து 391 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 148 பேரும் தேர்வு எழுதினர்.

    இதில் 32 ஆயிரத்து 9.55 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 15 ஆயிரத்து 129 பேரும், மாணவிகள் 17 ஆயிரத்து 826 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 10.46 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு 86.36 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.
    ×