என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கட்டிடங்கள் குலுங்கின
நீங்கள் தேடியது "கட்டிடங்கள் குலுங்கின"
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். #quakehitsPhilippines #Philippinesquake #Luzonquake
மணிலா:
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி
சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள் அட்டைப்பெட்டிகளைப் போல் சரிந்து விழுந்தன.
லுஸான் தீவின் போராக் நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 20-க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பிரேதங்களும் வெளியே எடுக்கப்பட்டன. இதேபோல், லுபாவ் நகரில் இடிந்து விழுந்த மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை உள்பட இருவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டதாக பம்பாங்கா மாகாண கவர்னர் லிலியா பினேடா இன்று மாலை தெரிவித்தார்.
நிலநடுக்கத்தின் எதிரொலியாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் ஜெனரேட்டர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலநடுக்கத்தால் இங்குள்ள கிளார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இடிபாடுகளில் 7 பேர் காயமடைந்தனர். #quakehitsPhilippines #Philippinesquake #Luzonquake
அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #AndamanEarthquake
போர்ட்பிளேர்:
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #AndamanEarthquake
அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #AndamanEarthquake
தைவான் நாட்டில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. #TaiwanEarthquake #Taiwan
தைபே:
பயங்கர எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் தொடர்ந்து எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில், பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தைவான் நாட்டில் இன்று மதியம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகவோ, காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. தைவான் அதிவேக ரெயில் சேவை மற்றும் தைவான் ரெயில்வே நிர்வாக ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரெயில்கள் வழக்கம்போல் இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூமிக்கடியில் நகரும் தன்மையுடைய இரண்டு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் தைவான் உள்ளது. எனவே, டெக்டோனிக் தட்டுகள் உராயும்போது ஏற்படும் நிலநடுக்கத்தின்போது தைவான் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே ஹூவாலியன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 17 பேர் உயிரிழந்தனர். 1999ல் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 2400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #TaiwanEarthquake #Taiwan

ஹூவாலியன் கவுண்டி ஹாலில் இருந்து 104.2 கிமீ கிழக்கில் பூமிக்கடியில் 31.3 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 6.0 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகவோ, காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. தைவான் அதிவேக ரெயில் சேவை மற்றும் தைவான் ரெயில்வே நிர்வாக ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரெயில்கள் வழக்கம்போல் இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூமிக்கடியில் நகரும் தன்மையுடைய இரண்டு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் தைவான் உள்ளது. எனவே, டெக்டோனிக் தட்டுகள் உராயும்போது ஏற்படும் நிலநடுக்கத்தின்போது தைவான் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே ஹூவாலியன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 17 பேர் உயிரிழந்தனர். 1999ல் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 2400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #TaiwanEarthquake #Taiwan
×

X