என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கலெக்டர் பொதுமக்கள் மனு
நீங்கள் தேடியது "கலெக்டர் பொதுமக்கள் மனு"
நெடுவாசலில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். #Tasmac
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் நெடுவாசல் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெடுவாசல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில், ஆதிதிராவிடர் பள்ளி அருகே ஒரு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் மது குடிப்பவர்கள் சுற்றித் திரிவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. ஆதிதிராவிடர் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்ல சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து இறுதி சடங்கு செய்ய சுடுகாட்டிற்கு போக முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய வேலைக்காக செல்லும் பெண்கள் அச்சத்துடன் அந்த வழியை கடந்து செல்கின்றனர்.
குடிப்பழக்கத்தால் தினசரி வீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள சித்தநேந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- சித்தநேந்தல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே கோவில்கள் உள்ளன.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் நிம்மதியாக சென்று வர முடியவில்லை. டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கும் குடிமகன்கள் நடுரோட்டில் வைத்து குடிக்கின்றனர். பின்னர் அங்கேயே பாட்டிலை உடைத்து போடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெண்கள் உள்பட பலரும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tasmac
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X