என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கவுன்டி கிரிக்கெட்
நீங்கள் தேடியது "கவுன்டி கிரிக்கெட்"
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன புஜாரா கவுன்டி கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா. டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் ஏலம் போகாததாலும் அதிக நேரம் கிடைப்பதால், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இவர் இடம்பிடித்துள்ள யார்க்ஷைர் அணி ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைக்கான 2-வது அரையிறுதி போட்டியில் ஹம்ப்ஷைர் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷைர் 348 ரன்கள் எடுத்தது.
பின்னர் 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யார்க்ஷைர் அணி களம் இறங்கியது. முதல் விக்கெட் வீழ்ந்ததும் அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவரை தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேன் ஸ்டெயின் டக்அவுட்டில் வெளியேற்றினார்.
ஆரம்ப கட்டத்தில் 82, 73, 101, 75 (நாட்அவுட்) என அசத்திய புஜாரா, அதன்பின் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெர்பிஷைர் அணிக்கெதிராக 14 ரன்களும், லங்காஷைர் அணிக்கெதிராக 19 ரன்களும், நார்தன்ட்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களுமே எடுத்தார்.
அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நான்கு நாட்கள் கொண்ட கவன்டி போட்டியிலும் 8 இன்னிங்சில் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளா். சராசரி 12.50 ஆகும்.
கவுன்டி போட்டியில் விளையாட செல்வதற்கு முன், இந்த ஆட்டம் இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று புஜாரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

×

X