என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி"
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
புதுடெல்லி:
நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை பல லட்சம் மக்கள் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.
அப்போது, அதிபர் சிரில் ராமபோசா ராகுல் காந்தியை தென் ஆப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் சில நாள்களில் தெலுங்கானாவில் மாற்றத்துக்கான புயல் வரும் என தெரிவித்துள்ளார். #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைக்க தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணியும், பாஜகவும் போட்டியிடுகின்றன.
இன்றுடன் நிறைவடையும் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கோடாட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சில நாள்களில் மாற்றத்துக்கான புயல் தாக்கும். இந்த புயலால் ஏற்படும் மாற்றத்தை மக்கள் வழங்க உள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் தெலுங்கானாவின் கனவுகள் நிறைவேறும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடியும், மாநிலத்தில் ஆட்சி செய்த சந்திரசேகர் ராவும் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகின்றனர். எனவேதான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவளித்து வருகிறது.
மாநிலத்தில் சந்திரசேகர் ராவை முதலில் தோற்கடிப்போம். அதன்பின், காங்கிரசும், மற்ற கட்சிகளும் மத்தியில் நரேந்திர மோடியை நிச்சயம் தோற்கடிப்போம்.
தற்போது உங்கள் உடைகள் மற்றும் மொபைல்களில் 'மேட் இன் சீனா' என உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை 'மேட் இன் தெலுங்கானா' என மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.
#TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
பிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer
புதுடெல்லி:
மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர், தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்து நாசிக் மார்க்கெட் கொண்டு சென்றார்.
வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார்.
4 மாத காலம் கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த சஞ்சய் சாதே, வெங்காயம் விற்று கிடைத்த 1064 ரூபாய் பணத்தை தபால் அலுவலகம் மூலம் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார்.
ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதன் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். #ChhattigarhAssemblyElections #Congress #RahulGandhi
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் பகன்ஜோர் நகரில் உள்ள பண்டிட் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. தொழிலதிபர்களின் சம்மதம் பெறாமல் மோடி எதையும் செய்வதில்லை.
பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #ChhattigarhAssemblyElections #Congress #RahulGandhi
கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy
பெங்களுரு:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவன ஊழியர்களை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார்.
இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RahulGandhi #Kumaraswamy
குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
ஜெய்ப்பூர்:
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
குஜராத்தில் வசித்து வரும் வெளிமாநில இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் என இந்தி மொழி பேசுபவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RSS
புதுடெல்லி:
கடந்த ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக 9 செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீசார் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RSS
கேரள மாநிலத்தையே புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #KeralaFloods #Congress #RahulGandhi
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.
இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.
இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.
இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.
இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது எந்த பலனையும் அளிக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RTIAct
புதுடெல்லி:
தலைமை தகவல் ஆணையர், இதர ஆணையர், மாநில தகவல் ஆணையர்கள் உள்ளிட்டோரின் ஊதியம் மற்றும் பணி தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்வது குறித்த முன்மொழிவை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டம் தொடர்பாக அனைத்து மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது எந்த பலனையும் அளிக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். ஆனால், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக உண்மையை மறைக்கப் பார்க்கிறது.
மக்களிடம் உண்மையை மறைக்க பாஜக முயற்சிக்கிறது. யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.
இப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதனால் பயனுமில்லை. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து இந்தியர்களும் சேர்ந்து கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RTIAct
பிரதமர் மோடி அவரது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #MannKiBatt #RahulGandhi
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த மாதம் விவசாயிகளுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், தனது விவசாய வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என கூறும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஆனால், அது அவரது மனதின் குரலாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புவது போல் தெரிகிறது. அவர் கூறியது போல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. இது சத்தீஸ்கர் பெண்மணி விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், சத்தீஸ்கர் பெண் கூறியதாக வெளியான வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார். #PMModi #MannKiBatt #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #MEA #Rahulgandhi
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்வதற்காக சிறப்பு அனுமதி கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ராகுலின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வது தொடர்பான விண்ணப்பம் எதையும் நாங்கள் பெறவில்லை என தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #RaveeshKumar #Rahulgandhi
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர். #Congress #IftarParty #RahulGandhi
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதல் முறையாக இன்று இப்தார் விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஷீலா தீட்சித், அகமது படேல், சீதாராம் யெச்சூரி, கனிமொழி, சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ரஷ்யா நாட்டு தூதர் நிகோலய் குகஷேவ் உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். #Congress #Congress #IftarParty #RahulGandhi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X