search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயத்ரி ரகுராம்"

    மோடி பதவியேற்கும் நேரத்தில் வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சி 2 நாட்களாக சமூகவலைதளங்களில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

    மோடி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அவரது எதிர்ப்பாளர்களான தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக மோடி ஆதரவாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.

    பா.ஜனதாவில் சில காலம் இருந்துவிட்டு தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காயத்ரி ரகுராம் இதை கண்டித்து பதிவிட்டு இருந்தார். காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம்.



    அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என கோபமாக பகிர்ந்து இருந்தார்.

    அதற்கு கமெண்டில் குவிந்த மோடி எதிர்ப்பாளர்கள் ‘மோடியை டிரெண்ட் பண்ணாததால் கோபம் வருகிறதா?’ என்பது போல் கேட்டிருந்தனர்.

    இதுபோல் தொடர்ந்து மோடியை ஒப்பிட்டு கமெண்ட் வரவும் அதற்கு இன்னொரு டுவிட்டைப் பகிர்ந்திருந்தார் காயத்ரி ரகுராம். அதில், ‘மோடிஜிக்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது.

    இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என கூறி இருக்கிறார்.
    இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் பேசியது முட்டாள் தனமானது என்று நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ‘இது போன்ற முட்டாள் தனமான பேச்சுகளை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம்.

    நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.

    மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள்.


    என் அங்கிளாக, நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால் இது போன்ற வார்த்தைகளை அல்ல. மாற்றமாக இருங்கள். மேலும் ஒரு அரசியல் வாதியாக அல்ல.

    என்னை முதுகில் குத்துபவர்கள் பலர் உள்ளனர். அவர்களை நான் தீவிரவாதிகள் என்று கூறட்டுமா? அது உங்களையும் சேர்த்து தான்.

    பல ஆண்டுகளாக காங்கிரஸ் இந்தியாவின் முதுகில் குத்தியுள்ளது. அப்படி என்றால் காங்கிரஸை தீவிரவாதி எனலாமா? கமல் நடித்தது போதும்’

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இன்னொரு பதிவில் ‘வேறு ஒரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கு கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள் தனமானது.

    இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கி.வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
    பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ’பொள்ளாச்சி சம்பவத்தால் அதிர்ச்சியாகியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


    நடிகரும் இசைஅமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டரில் ‘இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
    மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

    பாடகி சின்மயி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிறுமி ஒருவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற வீடியோக்களை பகிராதீர்கள். கோபத்தை வரவழைக்க இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம். கோரமான மக்கள்” என பதிவிட்டுள்ளார். 

    இயக்குனர் கரு.பழனியப்பன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரம்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை’’ என்று கூறியுள்ளார்.


    பா.ஜனதாவில் உள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘பொள்ளாச்சி சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த அரசியல் பின்னணியை சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

    பாலியல் குற்றங்கள் அரசியல் அல்ல. இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள். இது தனிநபரின் குற்றம். அந்த நபருக்கு உட்சபட்ச தண்டனை கொடுங்கள். குற்றத்தை ஆதரித்தவர்களையும் தண்டியுங்கள்’’.


    சைக்கோ போல சிந்திக்கும் ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. எந்த பணக்கார வீட்டு பையனோ, அரசியல் பின்னணி இருப்பவனோ, குடிகாரனோ, ஏழையோ, யாருக்கும் இந்த குற்றத்தில் இருந்து மன்னிப்பு இருக்கக் கூடாது. எந்த சாக்கும் சொல்லப்படக்கூடாது. இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

    தண்டனை இரண்டு மடங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தியோ, வேறெந்த வழியிலும் அவர்கள் தப்பித்து விடக்கூடாது. பொறுத்தது போதும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என எல்லா ஆட்சியிலும் நீண்ட காலமாக பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறன. எந்த அரசியல் கட்சி என்பதல்ல. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் சட்டம் மிகவும் கண்டிப்பாக இருந்தது என்பதுதான் உண்மை.

    ஏனென்றால் அவர் ஒரு பெண். பெண்மை எப்போதுமே மதிப்பு வாய்ந்தது. ஆண்கள் பதவி, பணம், காதல், ஆதரவு என எதை வைத்தும் பொய் சொல்லி அப்பாவிப் பெண்களை ஏமாற்றலாம். இந்த சம்பவத்தில் நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது’.

    இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். #PollachiRapists #PollachiAssaultCase

    நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டியதாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். #GayathriRaghuram
    நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்த போலி செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கிய நிருபர் தான். நான் படப்பிடிப்பு முடித்துவிட்டு என் சக கலைஞரை வீட்டில் விடச் சென்றேன்.

    வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினார்கள். நான் போலீசாருடன் மோதவில்லை.

    ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது. அதனால் அந்த ஆவணங்களை சரிபார்க்க போக்குவரத்து போலீசார் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை.


    அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்ட விட்டிருக்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #GayathriRaghuram

    தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகை கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் ரத்த காயத்தோடு இருக்கும் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது. 



    தூத்துக்குடியில் போலீசார் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை” என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.

    இதேபோல் நடிகை கார்த்திகா, “தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

    நீங்கள் உளவு துறையில் பணியாற்றுகிறீர்களா? துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா? தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவருக்கு பலர் பதிலடி கொடுத்து கண்டித்து வருகிறார்கள். #BanSterlite #SaveThoothukudi

    ×