search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி விலை உயர்வு"

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாததால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து உள்ளது.

    இது தொடர்பாக காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-

    ஆண்டு தோறும் கோடை வெயில் காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும்.

    இந்த ஆண்டு பருவ மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து காய்கறி விளைச்சல் வெகுவாக குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட நான்கில் ஒரு பங்கு பச்சை காய்கறிகள் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

    இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. இதேபோல் தக்காளி வழக்கமாக தினசரி 80 முதல் 90 லோடுகள் வரை வரும். ஆனால் விளைச்சல் பாதியாக குறைந்து உள்ளதால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருகிறது.

    இதனால் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது என்றும் இஞ்சி கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தற்போது கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இன்றைய காய்கறி மொத்த விலை (கிலோ)ரூபாய் விபரம் வருமாறு:-

    பெங்களூர் தக்காளி- 40
    வெங்காயம்-12
    சி.வெங்காயம் - 50
    கேரட்-40
    பீட்ரூட்-20
    கத்திரிக்காய்- 20
    அவரை-35
    உருளை-17
    இஞ்சி-130
    ப..மிளகாய்-50
    பீன்ஸ்-80
    வெள்ளரிக்காய்-20
    வெண்டைக்காய்-20
    முட்டைகோஸ்-10
    மாங்காய்-12
    முருங்கை-15
    கோவக்காய்-20
    சென்னையில் காய்கறி விலை கடும் உயர்வால் பீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. #KoyambeduMarket
    சென்னை:

    பருவ மழை பெய்யாததாலும் கடும் வறட்சி காரணமாகவும் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறி லாரி லோடு வரத்து பாதியாக குறைந்துள்ளது.

    தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களிலும் கடும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் பீன்ஸ் கொண்டுவரப்படும். தற்போது இது பாதியாக குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ் விலை ரு.130 ஆக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களாக உதகைமண்டலத்தில் உற்பத்தியாகும் பீன்ஸ் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவில்லை.

    மழை இல்லாததாலும் கடும் வெயிலாலும் காய்கறி விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை இரட்டிப்பாகி கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், புடலங்காய் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 375 லாரி லோடு காய்கறிகள் வரும். தற்போது 300 லாரி லோடுகளாக குறைந்து விட்டது.

    காய்கறி வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.160 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து, கோயம்பேடு காய்கறி, பழம், பூ மார்க்கெட் சங்க பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-

    கோடை வெயில் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இதனால் காய்கறி விலை உயர்வடைந்துள்ளது. வெண்டைக்காய், வெங்காயம், கத்தரிக்காய் விலையில் மாற்றம் இல்லை.

    கடந்த 10 நாட்களாக மாங்காய் உற்பத்தி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.40 முதல் 60 ஆக குறைந்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக மார்க்கெட்டில் காய்கறி விற்பனை 30 சதவீதம் குறைந்து விட்டது. வருகிற ‘மே’ மாதம் புதிய காய்கறிகள் உற்பத்தியாகி வரும் போது விலை குறையும் என எதிர் பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
    தருமபுரி மாவட்டத்தில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ பீன்ஸ் ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமான மழை பெய்து வந்ததால் விவசாயம் நன்றாக இருந்து வந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது காய்கறிகளின் அறுவடை முடிந்து விட்டதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனாலும் இன்று விடுமுறை நாள் என்பதால் உழவர் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. 
    காய்கறிகளின் விலை வருமாறு:-

    காய்கறிகளின் அதிகபட்ச விலையாக 1 கிலோ பீன்ஸ் ரூ.28-க்கும், அவரைக்காய் 1 கிலோ ரூ.30-க்கும், கேரட் 1 கிலோ ரூ.36-க்கும், தக்காளி 1 கிலோ ரூ.8-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    முறுங்கைகாய் 1 கிலோ ரூ.40-க்கும், வெண்டைக்காய் 1 கிலோ ரூ.10-க்கும், பீட்ருட் 1 கிலோ ரூ.24-க்கும், பீர்க்கங்காய் 1 கிலோ ரூ.26-க்கும், உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் 1 கிலோ ரூ.28-க்கும் மற்றும் பாகல் 1 கிலோ ரூ.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் வீழ்ச்சி அடைந்திருந்த காய்கறிகள் விலை இப்போது உயர்ந்து வருகிறது.

    புரட்டாசி மாதம் காய்கறி தேவை அதிகரித்துள்ள நிலையில் லாரி வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகமாகி விட்டது. அதிலும் குறிப்பாக காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை என வித்தியாசம் உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி ஒரு கிலோ விலை விபரம் வருமாறு:-

    கத்தரிக்காய் -ரூ.25, தக்காளி -ரூ.12, நவீன்தக்காளி -ரூ.13, வெங்காயம் -ரூ.16
    சின்னவெங்காயம் -ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.25, கேரட் -ரூ.40
    பீன்ஸ் -ரூ.50, பீட்ரூட் -ரூ.14, சவ்சவ் -ரூ.18, முள்ளங்கி -ரூ.17, கோஸ் -ரூ.10

    விலை அதிகமானது குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் முத்துகுமார் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் காணப்படுகிறது.

    ஒரு கடைக்கு 4 லாரிகளில் காய்கறிகளை கொண்டு வந்தால் 2 லாரிகளை மட்டும் முதலில் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கிறார்கள். 2 லாரியை வெளியில் நிறுத்தி விடுகிறார்கள். காய்கறிகளை இறக்கி விற்ற பிறகே வெளியில் நிற்கும் லாரியை உள்ளே அனுமதிக்கிறார்கள்.

    இதனால் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என விற்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

    தமிழ்நாட்டில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன. இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன.

    தற்போது டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப லாரி வாடகையும் உயர்த்தப்படுகின்றன. இதனால் முன்பு இருந்ததைவிட லாரி வாடகை அதிகரித்துள்ளது.

    காய்கறி உற்பத்தி அதிகமானதால் கடந்த ஏப்ரல் மாதம் வரை சென்னைக்கு காய்கறி வரத்து அதிகமானது. இதனால் காய்கறிகளின் விலை மிகவும் குறைந்தது.

    தற்போது டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது. கோடை காரணமாக காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது.

    பச்சை பட்டாணி கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இஞ்சி விலை ரூ.80 ஆக உள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெரிய வெங்காயம் (கிலோ) ரூ.10 முதல் 13 வரை. சின்ன வெங்காயம் ரூ.25-28, தக்காளி ரூ.10-15, அவரை ரூ.20-25, கேரட் ரூ.20-25, பீட்ரூட் ரூ.15-20, முள்ளங்கி ரூ.10-15, கத்திரிக்காய் ரூ.10-15, புடலங்காய் ரூ.10-15, கோவங்காய் ரூ.15-20, நூல்கோல் ரூ.15-20, வெண்டைக்காய் ரூ.15-20, காலிபிளவர் ரூ.20-30, சேனை கிழங்கு ரூ.15-20, 20-22, உருளைகிழங்கு, 20-25, ப.மிளகாய்-ரூ. 15-20, முருங்கைகாய் ரூ.30-35.

    இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கோடை காலம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×