என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கார் மரத்தில் மோதியது
நீங்கள் தேடியது "கார் மரத்தில் மோதியது"
புன்னம்சத்திரம் அருகே புளிய மரத்தில் கார் மோதி குப்புறக் கவிந்த விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் அருகே வெங்கமேடு ராம்நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் வேலைக்காக இவரும் குளித்தலை பொய்யாமணி பங்களாபுதூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி (29) மற்றும் அதேபகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேர் காரில் கரூரில் இருந்து ஈரோடுக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டி வந்தார்.
புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடை பகுதிக்கு கார் வந்தபோது, கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி, கார் குப்புறக் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த செந்தில் குமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில்பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்த தெய்வசிகா மணி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
×

X