search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை தீபத்திருவிழா"

    கார்த்திகை தீபத்திருவிழா காணச்செல்லும் பக்தர்களுக்காக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    விழுப்புரம்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்.

    இதையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு கார்த்திகை தீபத்திருவிழா காணச்செல்லும் பக்தர்களுக்காகவும் மற்றும் பவுர்ணமி என்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #tamilnews
    ×