search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் இறுதி"

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #JapanOpen #srikanth

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் கொரியாவின் சீ டாங்சிடம் 21-19, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ##JapanOpen #Srikanth

    அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சிலிச் 7-6, 8-6, 6-2, 6-4 என்ற கணக்கில் டேவிட் கோபினை வீழத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரபோவா அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    7-வது வரிசையில் இருக்கும் சிலிச் (குரோஷியா) 7-6, (8-6), 6-2, 6-4 என்ற கணக்கில் 10-வது வரிசையில் இருக்கும் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழத்தினார். அவர் கால் இறுதியில் நிஷி கோரியை (ஜப்பான்) சந்திக்கிறார். நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப்பை தோற்கடித்தவர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனும், தர வரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான ‌ஷரபோவா (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.



    ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவாக்கியா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) 6-3, 2-6, 6-4 என்ற கணக்கில் ‌ஷப்லென்காவையும் (பெலாரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) 6-7 (3-7), 7-5, 6-2 என்ற கணக்கில் வான்ட்ரோ கோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தனர்.

    கால் இறுதி ஆட்டங்களில் சுராஸ்-கெய்ஸ், ஒசாகா- சுரென்கோ மோதுகிறார்கள். #USOpen
    ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் கஜகஸ்தானிடம் 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. #AsianGames2018
    ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி நேபாளத்தை எதிர் கொண்டது. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    கால்இறுதியில் கஜகஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.



    துடுப்பு படகு போட்டியில் பிரகாஷ் சர்மா- ஜேம்ஸ்பாய் சிங் ஆகியோர் அடங்கிய அணி 200 மீட்டர் (சி2 ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டி) 9-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இன்று காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக்வர்மா- ஜோதி சுரேகா ஆகியோரை கொண்ட இந்திய அணி கால்இறுதிக்கு முந்தை சுற்றில் ஈராக் அணியுடன் மோதியது.

    இதில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை நடக்கிறது.

    ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்னு தாஸ்- தீபிகா குமாரி ஜோடி 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியா ஜோடியிடம் தோற்று வெளியேறியது. #AsianGames2018
    ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரின் கால்இறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆறாவது வரிசையில் இருக்கும் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். இதில் நடால் 2-6, 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் கரென் கஜோனோவ் (ரஷியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டெபின்ஸ் (கிரீஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogersCup #RafaelNadal
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.



    இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.



    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
    அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். #VenusWilliams
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.



    இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 38 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 2 செட்டிலும் முதலில் முன்னிலை பெற்றாலும் அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் மரியா சக்காரி, அமெரிக்க வீராங்கனை டானிலே காலின்சை சந்திக்கிறார். #VenusWilliams
    உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, சிந்து, பிரனீத் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு முன்னேறினர். மற்றொரு முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #WorldBadmintonChampionships2018
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 4-ம் நிலை வீராங்கனையான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் முதல் செட்டை 22 நிமிடங்களில் வசப்படுத்தினார்.

    இரண்டாவது செட்டிலும் ஆரம்பத்தில் சாய்னாவின் கை ஓங்கி நின்றாலும், அதன் பிறகு முன்னாள் சாம்பியனான இன்டானோன் சரிவை சமாளித்தார். ஒரு கேம் 32 ஷாட் வரை நீடித்ததால், ரசிகர்கள் பரவசமடைந்தனர். 19-19 என்று சமனுக்கு கொண்டு வந்த இன்டானோன் அதன் பிறகு, பந்தை வெளியிலும், வலையிலும் அடுத்தடுத்து அடித்து தவறிழைத்தார். இதனால் 2-வது செட்டும் சாய்னாவின் வசம் ஆனது.

    47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மல்லுகட்ட இருக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய புயல் பி.வி.சிந்து 21-10, 21-18 என்ற நேர் செட்டில் சுங் ஜி யென்னை (தென்கொரியா) சாய்த்தார். இதில் 2-வது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 11-13 என்று பின்தங்கி இருந்த போதிலும் எழுச்சி பெற்று எதிராளியை அடக்கினார்.

    42 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சிந்து கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். இவரிடம் தான் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து இறுதி ஆட்டத்தில் நீண்ட ‘யுத்தம்’ நடத்தி தோற்று இருந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் சிந்துவுக்கு கனிந்துள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியனை (டென்மார்க்) விரட்டியடித்தார். சாய் பிரனீத் கால்இறுதியில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். அதே சமயம் 6-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் டாரன் லீவ்விடம் வீழ்ந்தார். இதே போல் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை சக நாட்டவர் ஷி யுகி 21-15, 21-9 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கோ சூன் ஹியாட்- ஷிவோன் ஜெமி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. #WorldBadmintonChampionships2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் லியோனஸ் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி பார்சிலோனா கிஸ்டிக்காவும், போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணிக்காகவும் ஆடுகிறார்.

    இந்த உலகக்கோப்பையில் இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அர்ஜென்டினா 2-வது சுற்றில் பிரான்சுடனும், போர்ச்சுக்கல் அணி உருகுவேயுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 30-ந்தேதி நடக்கிறது.

    3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். பிரான்ஸ் அணி மிகவும் வலுவாக இருப்பதால் அர்ஜென்டினாவுக்கு மிகவும் கடினமே. ஆனால் மெஸ்சி தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினால் பிரான்சால் தடுக்க முடியாது. #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நாடாலூடன் அர்ஜெண்டினா வீரரான டியாகோ ஷ்வாட்மேன் மோதுகிறார். #FrenchOpen #Nadal #Schwartzman
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நாடால் (ஸ்பெயின்) மோதும் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    அவர் கால் இறுதியில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஷ்வாட்மேனை சந்திக்கிறார்.

    நடால் இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் கால் இறுதிக்கு வந்துள்ளார். களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான அவர் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளார். அர்ஜென்டினா வீரர் டியாகோ 4-வதுசுற்றில் ஆண்டர்சனை வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் நடாலை நம்பிக்கையுடன் சந்திக்கிறார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா)- ஆறாவது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். நேற்று நடந்த கால் இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் கடும் போராட்டத்துக்கு பிறகு இத்தாலி வீரர் மார்கோ செச்சினட்டோவிடம் தோற்றார். மார்கோ அரை இறுதியில் டொமினிக் தீம்மை (ஆஸ்திரியா) சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதியில் மோதும் வீராங்கனைகள் வருமாறு:-

    ஷிமோனோ ஹெலப் (ருமேனியா)- கெர்பர் (ஜெர்மனி)

    முகுருஜா (ஸ்பெயின்)- ‌ஷரபோவா (ரஷியா). #FrenchOpen #Nadal #Schwartzman
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரரை போராடி வென்ற சிலிச் கால் இறுதிக்கு முன்னேறினார். #frenchopen #cilic
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரான மரீன் சிலிச் (குரோஷியா) 4-வது சுற்றில் பேபியோ பாக்னியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

    இதன் முதல் இரண்டு செட்டை சிலிச் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது மற்றும் 4-வது செட்களை இத்தாலி வீரர் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட் பரபரப்பாக இருந்தது.

    இந்த செட்டை சிலிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3.

    3 மணி 37 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே சிலிச்சால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர் கால்இறுதியில் 5-ம் நிலை வீரர் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜெர்மனி வீரர் மார்ட்டெரரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று கால்இறுதியில் நுழைந்தார்.

    சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 900-வது வெற்றியாகும். நடால் கால்இறுதியில் அர்ஜென்டினா வீரர் டியோகோவை எதிர்கொள்கிறார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- மார்கோ (இத்தாலி), ஸ்வேரேவ் (ஜெர்மனி)- டொமினிக் தியம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெலப் (ரூமேனியா) 3-வது இடத்தில் இருக்கும் முருகுஜா (ஸ்பெயின்), ‌ஷரபோவா, டாரியா கசாட்சினா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு நுழைந்தனர்.

    இன்று நடைபெறும் கால்இறுதியில் மேட்சன் கீஸ் (அமெரிக்கா)- புதின் சேவா (கஜகஸ்தான்) ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- கசாட்சினா மோதுகிறார்கள்.#frenchopen #cilic
    ×