search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் அதிகாரி"

    ஜம்மு காஷ்மீரில் காவல்நிலையத்தின் மீது எதிர்பாராவிதமாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். #JammuKashmir #MillitantAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்துவரும் நிலையில், தொடர்ந்து அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவாட்டத்தில் உள்ள காவல்நிலையத்தை திடீரென சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். அப்போது அவர்களை எதிர்த்து போராடிய சகிப் மிர் என்ற காவல்துறை அதிகாரி பலத்த காயமடைந்தார்.

    இதையடுத்து, பாதுகாப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த காவலர் சகிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தற்போது, அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MillitantAttack
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி கரிய முண்டாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கடத்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். #Policemenrescued
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.பி. கரியமுண்டா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 அதிகாரிகள் கடத்தப்பட்டதாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.

    இந்நிலையில், டிலிங் பாரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்ட 4 காவல் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை இயக்குனர் பாண்டே, உள்ளூர் மக்களின் உதவியுடன் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மீட்கப்பட்ட அதிகாரி கூறுகையில், பாதல்கர்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    முன்னதாக 3 காவல் அதிகாரிகள் மட்டுமே கடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை இயக்குனர், 4-ம் அதிகாரி விடுமுறையில் இருப்பதாக எண்ணியிருந்ததாகவும், மீட்கப்பட்ட பின்னரே 4 பேர் என உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். #PolicemenRescued
    ×