search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளாஸ்கோ மாநாடு"

    பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர்களை காலநிலை நிதியாக வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்றார்.
    வாஷிங்டன்:

    ஸ்காட்லாந்தின் துறைமுக நகரான கிளாஸ்கோவில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு சமீபத்தில் தொடங்கியது.

    கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் நேரில் பங்கேற்றார்.

    மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா அடையும். வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர்களை சீக்கிரம் காலநிலை நிதியாக வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

    இந்நிலையில், கிளாஸ்கோ மாநாட்டில் இந்தியா வெளியிட்ட உறுதிமொழியை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது. 

    இதுதொடர்பாக ஐ.எம்.எப். தகவல் தொடர்பு துறை இயக்குனர் ஜெர்ரி ரைஸ் கூறியதாவது:

    2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை அடையும் என இந்தியா அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

    இந்தியா மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியுள்ளது. எனவே அதன் நடவடிக்கைகள் மற்ற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் நடவடிக்கையை ஊக்குவிக்க உதவும்.

    நடப்பு பத்தாண்டுகளில் முன்னேற்றத்தை அடைவதில் இந்தியா கவனம் செலுத்துவதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மற்ற நாடுகளைப் போலவே தற்போதைய தசாப்தத்தில் வாயு மாசுவைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம் என கூறினார்.

    இதையும் படியுங்கள்...உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.93 கோடியைக் கடந்தது
    ×