search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபிள் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை"

    அரசுக்கு சொந்தமான செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNCable
    சென்னை:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் தமிழகத்தில் சுமார் 27½ லட்சம் ‘செட்டாப்’ பாக்ஸ்கள் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களின் நலன் கருதி இந்த ‘செட்டாப்’ பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘செட்டாப்’ பாக்ஸ்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

    இந்தநிலையில், ‘அதிரடி’ என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்-ஆப் செய்தி கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘எந்த டிஜிட்டல் கம்பெனியின் ‘செட்டாப்’ பாக்ஸையும் கொடுத்து தங்களது ‘செட்டாப்’ பாக்ஸை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், எந்தவொரு முன்பணமும் கட்ட தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு நிறுவனத்துக்கு சொந்தமான ‘செட்டாப்’ பாக்ஸ்களை, வேறொரு நிறுவனத்தின் ‘செட்டாப்’ பாக்ஸ்-க்காக மாற்றிக்கொள்வது சட்டத்துக்கு புறம்பான செயல் மற்றும் குற்றமும் கூட. எனவே இச்செயலில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #TNCable
    ×