என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைது வாரண்ட்
நீங்கள் தேடியது "கைது வாரண்ட்"
பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModiExtradition #LondonCourt
லண்டன்:
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும். #NiravModiExtradition #LondonCourt

அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும். #NiravModiExtradition #LondonCourt
2010-ம் ஆண்டு தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு மகாராஷ்டிரா மாநிலம் துர்ஹமபாத் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #TDP #ChandrababuNaidu
மும்பை:
கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (தற்போது ஆந்திர முதல்வர்) தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் கோர்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் ஆஜராகாததால் இன்று சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
×

X