search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலின் முன்ரோ"

    நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியாவுக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர், குருணால் பாண்டியா இடம் பிடித்தனர். நியூசிலாந்து அணியில் மிட்செல் அறிமுகமானார்.

    அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), தவான், டோனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, குருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார்.

    நியூசிலாந்து:- கொலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், மிட்செல், கிராண்ட்ஹோம், சவுத்தி, சான்ட்னெர், ஸ்காட், சோதி, பெர்குசன்.

    டிம் செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக செய்பெர்ட் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் நியூசிலாந்து 4.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. டிம் செய்பெர்ட் 30 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்

    நியூசிலாந்து அணி 8.2 ஓவரில் 86 ரன்கள் சேர்த்திருந்தபோது கொலின் முன்ரோ 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். நியூசிலாந்து 10.2 ஓவரில் 100 ரன்னைத்தொட்டது.

    செய்பெர்ட் 43 பந்தில் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84 ரனகள் குவித்து கலீல அகமது பந்தில் க்ளீன் போல்டானார். கேன் வில்லியம்சன் 22 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். என்றாலும் நியூசிலாந்து 200 ரன்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ராஸ் டெய்லர் 14 பந்தில் 2 சிக்சருடன் 23 ரன்கள் சேர்த்தார். கிராண்ட்ஹோம் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். ஸ்காட் அதிரடியாக விளையாடி 7 பந்தில் 20 ரன்கள் விளாச நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சாஹல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
    ×