என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்
நீங்கள் தேடியது "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்"
பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான தலைவிதி எங்கள் கையில்தான் உள்ளது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கையில்தான் உள்ளது என கல்லீஸ் தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR #Kallis
ஐபிஎல் 11-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மற்ற இரண்டு அணிகள் எது என்பதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஐந்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவிதி அந்த அணியிடம்தான் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ஜேக்யூஸ் கல்லீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்லீஸ் கூறுகையில் ‘‘எங்களுடைய தலைவிதி இன்னும் எங்கள் கையில்தான் உள்ளது. நாங்கள் இன்னும் இரண்டு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றால், எங்களால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.
நாங்கள் தற்போது இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறோம். இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மற்ற அணிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை குறித்து நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை’’ என்றார்.

×

X