search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோகர்ணா கோவில்"

    மங்களூரு நகர் குத்ரோலி பகுதியில் பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவிலில் வருகிற 10-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது.
    மங்களூரு நகர் குத்ரோலி பகுதியில் பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மற்றும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் நவராத்திரி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. மேலும் தசரா விழா 14-ந்தேதி தொடங்குகிறது.

    14-ந்தேதி தசரா விழாவை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்கிறார். நவராத்திரி மற்றும் தசரா விழாவையொட்டி மங்களூரு நகரில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் கோவில் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இதனால் மங்களூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜனார்த்தன பூஜாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மங்களூரு குத்ரோலி கோகர்ணா கோவிலில் வருகிற 10-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மகாநவமி உற்சவம் நடக்கிறது. காலை 11.50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நவதுர்கைகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    அதன்பின்னர் 14-ந்தேதி தசரா விழா தொடங்குகிறது. இதனை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்கிறார். இதில், மந்திரி யு.டி.காதர் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். 19-ந்தேதி விஜயதசமி அன்று தசரா ஊர்வலம் நடக்கிறது என்றார்.

    ×