search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க்விட் எலெக்ட்ரிக்"

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #kwidfeatureloaded


    ரென்லாட் நிறுவனம் தனது க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ரெனால்ட் க்விட் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கிறது. புதிய காரின் வெளியீடு குறித்த விவரங்கள் அறியப்படாத நிலையில், ரெனால்ட் க்விட் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வரும் என தெரிகிறது.

    இந்தியாவில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் வெர்ஷன் விலை ரூ.6.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. வெளியாகும் பட்சத்தில் க்விட் எலெக்ட்ரிக் கார் மஹேந்திரா இ20 மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரெனால்ட் க்விட் மாடலை உருவாக்கிய பொறியாளர்கள் ஏற்கனவே சீனா சென்று எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் க்விட் மாடலுக்கான பேட்டரி மற்றும் பேட்டரி மேலாண்மை பணிகளில் சீன பொறியாளர்கள் உதவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியாவில் விற்பனையாகும் விலை குறைந்த கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இருக்கிறது. க்விட் ஹேட்ச்பேக் மாடல் தற்சமயம் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.0-லிட்டர் வேரியன்ட் AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    காரின் அடிப்படை வடிவமைப்பினை இந்திய பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் நிலையில், சீன பொறியாளர்களின் காருக்கான பேட்டரி மற்றும் பேட்டரி மேலாண்மை சிஸ்டத்தை வழங்க இருப்பதாக இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Renault #kwidfeatureloaded
    ×