என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சபாநாயகர் தனபால்"
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்ற பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல்பாடு இனி சட்டசபையில் எப்படி இருக்கும்?
பதில்:- பொறுத்து இருந்து பாருங்கள்.
கேள்வி:- அரசு மீது தி.மு.க.நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா?
பதில்:- சட்டசபையில் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்த பிறகு அது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டார். இவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் உள்பட 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
அமைச்சர் ஜெயக்குமார் விடுத்த அழைப்பில், “அ.தி. மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட இயக்கம். சசிகலா, தினகரன் குடும்பம் தவிர பிரிந்தவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். இதையடுத்து சபாநாயகர் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சபாநாயகர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், வக்கீலுமான மனோஜ்பாண்டியன் ஆகியோர் மனு ஒன்று கொடுத்தனர்.
அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.
சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.
எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக தான் செயல்படுகிறேன்.
நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன். அ.தி.மு.க.வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவான எம்.எல்.ஏ.வாக நான் இருந்து வருகிறேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.
கடந்த சட்டசபை தொடர் முழுவதும் கலந்து கொண்டுள்ளேன். எந்த காலகட்டத்திலும் தி.மு.க.வுடனோ மற்றவர்களுடனோ எந்தவித தொடர்பும் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் கனவு, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆளும் என்று சொன்னார்கள். அந்த நல்ல எண்ணத்தில் நானும் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வும் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இணைந்து பேசியிருக்கிறோம்.
ஜெயலலிதாவை பாதுகாத்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி என்று இயங்கிய போது கூட நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து பதிவு செய்துள்ளார்கள். அதிலே நான் உறுப்பினராக கூட இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை, என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறோம். இனியும் செயல்படுவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கொறடா சபாநாயகரை சந்தித்து ஏதோ ஒரு கடிதம் அனுப்புவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன கடிதம் வருகிறது என்று தெரியவில்லை. வந்ததற்குப் பிறகு அதில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது, என தெரிந்துகொண்டு அதற்கான பதிலை சபாநாயகரை நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.
அ.தி.மு.க.விற்கு எதிராக நான் செயல்படவில்லை. சசிகலா தலைமையில் அம்மா அணி இயங்கிய போது எடுத்த போட்டோக்கள் அவர்களிடம் இருக்கலாம். அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசலாம். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #kalaiselvanmla #admk #prabhumla
கோர்ட்டு தீர்ப்பு பற்றி சட்டசபை செயலாளரிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்னும் தீர்ப்பு நகல் வரவில்லை. தீர்ப்பு நகல் கிடைத்ததும் எம்.எல்.ஏ. பதவி காலியானது பற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றார். #TNAssembly #Rajendran #Dhanapal
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த சட்டமன்றம் கண்ணியம் மிக்க சபையாகும். இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் நுழைந்து விட முடியாது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் ஊழியர்கள் கூட தலையில் தொப்பி அணிந்துதான் உள்ளே வருவார்கள். சிறப்பு நேரமாக கவர்னர் வந்து செல்வார். சபாநாயகரால் அனுமதிக்கப்படும் விருந்தாளிகளும் வந்து அமரலாம். இவர்களை மீறி யாரும் உள்ளே வரமுடியாது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல தலைமை செயலாளர் கூட உள்ளே வந்து இருக்கையில் அமர முடியாது. அதையும் மீறி யார் வந்தாலும் அவர்களை கண்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. ஏன் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட உங்களுக்கு (சபாநாயகருக்கு) உண்டு. அந்த அளவுக்கு தாங்கள் சர்வ வல்லமை படைத்தவர். எந்த கோர்ட்டும் உங்களை அழைக்க முடியாது. கட்டளையிட முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் கவர்னர் உரை நிகழ்த்திய அன்று அவருடன் வந்த செயலாளர் தங்கள் சபாநாயகர் இருக்கை அருகே இணையாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். பொதுவாக கவர்னர் வரும்போது அவருடன் வரும் செயலாளர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று தலைமை செயலாளர் அருகே அமர்வதுதான் வழக்கம்.
ஆனால் இப்போது சட்டமன்றத்தின் உள்ளேயே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த மன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் நான் இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
கவர்னரின் உதவியாளர்கள் அமர்வதை இனிவரும் காலங்களில் சரியாக எப்படி கையாள வேண்டுமோ? அதை இனி கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #DuraiMurugan #Dhanapal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்