என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சரண்யா பொன்வண்ணன்
நீங்கள் தேடியது "சரண்யா பொன்வண்ணன்"
ராஹேஷ்.ஆர் இயக்கத்தில் துருவ் - ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நடிப்பில் வெளியாகி இருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் விமர்சனம். #MIPMEReview #Dhruvaa #AishwaryaDutta
நாயகன் துருவ் கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீடு வீடாக கேஸ் சப்ளை செய்து வரும் துருவ், ஒரு நாள் நடுரோட்டில் பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் திருடுபவர்களை பார்க்கிறார்.
பறித்து சென்றவர்களை துரத்தி சென்று, அவர்களை அடித்து அந்த செயினை எடுத்து செல்கிறார். இதையடுத்த மைம் கோபியின் செயின் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள், துருவ் யார் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார் துருவ்.
துருவ்வை கொல்ல நினைக்கும் நிலையில், துருவ்வும் அவர்கள் கும்பலில் ஒரு ஆளாக சேர்ந்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் செயின் திருடும் கும்பலை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் போலீஸ் அதிகாரி ஜே.டி.சக்ரவர்த்தி.
இறுதியில் ஜே.டி.சக்ரவர்த்தி செயின் திருடும் கும்பலை பிடித்தாரா? நாயகன் துருவ் செயின் திருடனாக மாற காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துருவ், ஆக்ஷன், காதல், எமோஷனல் என்று நடிப்பில் குறை வைக்கவில்லை. துறுதுறுவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா தத்தாவும், பிற்பாதியில் துருவ்விற்கு மனைவியாக வரும் அஞ்சனாவும் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
துருவ்விற்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், தனக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, அருள்தாஸ், மைம் கோபி என அனுபவ நடிகர்களும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.
தினசரி செய்திகளில் ஒன்றாகிப்போன செயின் பறிப்பு சம்பவங்களின் பின்புலத்தில் உள்ள நெட்வொர்க் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராகேஷ். அதை சமூக விழிப்புணர்வு படமாக தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள். வலிமையான கதையாலும், சுளீர் வசனங்களாலும் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ். படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதிக நகைகள் அணிந்து செல்லும் பெண்களுக்கு இப்படம் ஒரு பாடமாக அமையும். அதுபோல், இது சாதாரண திருட்டு மட்டுமில்லாமல், பெரிய கும்பல் இருக்கிறது என்றும், இதனால் பலர் உயிர் இழக்கும் அபாயமும் இருக்கிறது என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திகில் கூட்டியிருக்கிறது. பிஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளை துல்லியமாக காட்டி இருக்கிறது.
மொத்தத்தில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ விறுவிறுப்பு. #MIPMEReview #MarainthirunthuParkkumMarmamEnnaReview #Dhruvaa #AishwaryaDutta
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனம். #KolamavuKokilaReview #Nayanthara
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் பெர்ணான்டசுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, சாந்த சுபாவமுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் பத்தாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் சரண்யா பொன்வண்ணனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதை சரிசெய்ய முடியும் என்றும், அதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ண நயன்தாரா முயற்சி செய்கிறார். இந்த நிலையில், போதைப்பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை கொடுத்து ஒரு இடத்தில் கொண்டு கொடுக்க சொல்கிறது. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறார்.
இதையடுத்து தனது அம்மாவை காப்பற்ற பணம் தேவைப்படுவதால், போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாரா அந்த கும்பலின் தலைவரிடம் பணம் வாங்குகிறார்.
கடைசியில், இந்த போதைப் பொருள் கடத்தல் நயன்தாராவுக்கு எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது? அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார்? தனது அம்மாவை காப்பாற்றினாரா? யோகி பாபுவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தனது ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை கொடுக்கிறது.
நயன்தாராவின் சாந்தத்தை பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். கல்யாண வயசு பாடலை பார்க்கவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரையரங்கில் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சரண்யா பொன்வண்ணன் யதார்த்தமான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். ஜாக்குலினின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. முதல் படம் போல இல்லாமல், ரசிகர்களை கவரும்படியாகவே ஜாக்குலின் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஹரிஷ் பேரிடி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா என மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.
தனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள். தனது அம்மாவை காப்பாற்ற போதை பெருள் கடத்தலில் ஈடுபடும் நயன்தாரா அதில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட்தான். திரையில் பார்க்கவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `கோலமாவு கோகிலா' கொண்டாட்டம். #KolamavuKokilaReview #Nayanthara
பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன், தொடர்ந்து அம்மா கேரக்டர் பற்றி விளக்கம் அளித்துள்ளார். #SaranyaPonvannan
எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’. இயக்குனர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக 'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர்.
நாயகன் துருவாவின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், ஜே.டி சக்கரவர்த்தி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்தும், படம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
"ஒரு படத்துல நடிக்க அழைப்பு வரும்போது, அந்தப்படத்தின் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எல்லோருமே கிட்டத்தட்ட புதுமுகங்களா இருந்தாங்கன்னா, நான் முக்கியமா படத்தையோட கதையை கேட்பேன்.. அதற்கப்புறமா அதுல என்னோட கதாபாத்திரத்தையும் கேட்டுட்டுத்தான் ஒத்துக்குவேன். சில கதைகளை, 'சரி.. பண்ணுவோமே' என்கிற அளவு ஈடுபாட்டுடன் தான் நடிப்போம்.. ஆனால் சில கதைகள் இதில் நாம நடிச்சே ஆகணும்னு சொல்ற அளவுக்கு சூப்பரா இருக்கும்.. அப்படி ஒரு படம் தான் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'.
இந்தப்படத்துல ஒரு சாதாரண, அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கிற, ஏழ்மையான வீட்டு பெண்ணாகத்தான் நடிச்சிருக்கேன். ஆனாலும் என் கேரக்டரை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். படத்துல நடிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிஞ்சது. டப்பிங் பேசும்போது பார்த்தப்ப இன்னும் அசந்து போயிட்டேன். இந்த கேரக்டர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்னு தான் சொல்வேன்.
தொடர்ந்து அம்மா கேரக்டராகவே பண்றீங்களேன்னு பலரும் கேட்கத்தான் செய்றாங்க. ஆனாலும் கடவுளின் அருளாலும், இயக்குனர்களின் புதிய கற்பனைகளாலும் எனக்கு படத்துக்குப்படம் வித்தியாசமான அம்மா கேரக்டர்களாக கிடைத்து வருகின்றன. இந்தப்படம் பார்ப்பதற்கு சின்னப்படமா தெரிஞ்சாலும், படம் பார்க்கிறப்ப உங்களை அப்படி, இப்படினு நகரவிடாம கட்டிப்போட்டுரும்" என்கிறார் சரண்யா பொன்வண்ணன்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் முன்னோட்டம். #CoCo #KolamavuKokila #Nayanthara
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஹரிஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ஆர்.எஸ்.சிவாஜி, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - அனிருத், படத்தொகுப்பு - ஆர்.நிர்மல், ஒளிப்பதிவு - சிவக்குமார் விஜயன், கலை இயக்குனர் - ஏ.அமரன், ஸ்டில்ஸ் - சித்தராசு, ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், வீரா பாபு, மேக்கப் - ஷயீக் பாஷா தயாரிப்பு - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் - நெல்சன் திலீப்குமார்.
தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamavuKokila #Nayanthara
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருபட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீசாக இருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படமும் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mark ✔️ your Calendar 🔥🔥🔥🔥🔥 for #KolamaavuKokila#Nayanthara@anirudhofficial@Nelson_director#CocofromAug10#KabiskabaaCoCopic.twitter.com/fPLxAIq7Yr
— Lyca Productions (@LycaProductions) July 12, 2018
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமந்தாவும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பாராட்டுக்களையும் பெற்றது. ஜூலை 5-ஆம் தேதி வெளியான இந்த டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா தெரிவித்திருப்பதாவது,
`இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
I know I am a little late.. the trailer of #Kolamavukokila is outstanding 👏👏 Can’t wait to watch this film . All the very best to this team and #Nayanthara for having balls of steel 🙏🙏 @anirudhofficial#NelsonDilipkumar
— Samantha Akkineni (@Samanthaprabhu2) July 11, 2018
நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படம் போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
#KabiskabaaCoco - #TheGibberishSong#KolamaavuKokila Trailer & Full Album from July 5th🔥🔥🎼🎹🥁🔥🔥 #Nayanthara@anirudhofficial@Nelson_director@Siva_Kartikeyan@Arunrajakamarajpic.twitter.com/fjw24Wa2Qz
— Lyca Productions (@LycaProductions) July 3, 2018
இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara
ஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இட்லி' படத்தின் விமர்சனம். #ITLY #SaranyaPonvannan
சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படித்து வரும் சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தகவல் வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் செய்ய தேவையான பணத்தை மூன்று பேரும் சேர்த்து சேர்த்து விடுகின்றனர்.
அந்த பணத்தை வங்கிக் கணக்கில் போடுவதற்காக மூன்று பேரும் வங்கிக்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து வங்கிக்குள் நுழையும் கொள்ளையர்கள் அவர்களிடமிருக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கி செல்கின்றனர். வங்கி மேலாளரான சித்ரா லட்சுமணனிடம் இதுகுறித்து மூன்று பேரும் புகார் கூற, பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால் மட்டுமே அதனை திருப்பித் தர ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் கையை விரிக்கிறார்.
பணம் போனதை எண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் மூலமாக அவர்களுக்கு துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது.
அந்த துப்பாக்கியை பயன்படுத்தி, பணத்தை தொலைத்த வங்கியில் இருந்தே கொள்ளையடிக்க திட்டமிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் போலீசார் அந்த வங்கியை சுற்றிவிட, வங்கியில் இருக்கும் அனைவரையும் பிணயக் கைதிகளாக பிடித்து வைத்து அங்கிருந்து தப்பிக்க மூன்று பேரும் முயற்சி செய்கின்றனர்.
அவர்கள் தனது ஆட்கள் தான் என்று கூறி, தீவிரவாதியான மன்சூர் அலி கான் போலீசுக்கு தகவல் கொடுத்து ஜெயிலில் இருக்கும் தனது ஆளை ரிலீஸ் செய்ய நிபந்தனையிடுகிறார்.
இதனால் மூன்று பேரும் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட கடைசியில், விட்ட பணத்தை மீட்டார்களா? போலீசில் சிக்கினார்களா? சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. மூன்று பேருமே படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டு என மூத்த நடிகர்கள் முதிர்ச்சியான நடிப்புடன் காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மன்சூர் அலி கான் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விட்ட பணத்தை திரும்ப பெற பணம் போன வழியையே தேர்ந்தெடுத்து அதில் சிக்கிக் கொண்டு அல்லோல கல்லோலபடும் மூன்று பெண்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதை மையமாக வைத்து காமெடி, பாசம், குடும்பம் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஆர்.கே.வித்யாதரன். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும், காட்சியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஹரி கே.கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பரணி கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `இட்லி' இன்னும் வேகவைத்திருக்கலாம். #ITLY #SaranyaPonvannan #KovaiSarala #Kalpana
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
#KolamaavuKokila#CoCo#Nayanthara@anirudhofficial@Nelson_director#ReleasingSoon 🔥🔥🔥 pic.twitter.com/ZD3jbQqkd7
— Lyca Productions (@LycaProductions) June 28, 2018
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாரா தற்போது `கொலையுதிர் காலம்', அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara
சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இட்லி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Idly
இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“. இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது. பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது. பாபு தூயவன் மற்றும் ஜி.கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X