என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சர்ஜுன் கே.எம்.
நீங்கள் தேடியது "சர்ஜுன் கே.எம்."
சர்ஜூன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஐரா' படத்தின் விமர்சனம். #Airaa #AiraaReview #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
பத்திரிகையாளரான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான ஜெயப்பிரகாஷ் - மீரா கிருஷ்ணன் முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார்.
கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு சிறுவன் ஒருவனையும் நயன்தாரா சந்திக்கிறார். தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார்.
மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. இதில் கலையரசனுக்கு சம்பந்தப்பட்ட ஒருவரும் இறந்துவிட, இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார்.
கடைசியில், மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா
அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். ஒரு தோற்றத்தில் நகரத்து சாயலிலும், மற்றொரு தோற்றத்தில் கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கலையரசன் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
எச்சரிக்கை படத்திற்கு பிறகு ஒரு முழு நீள த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜூன். முதல் பாதி காமெடி கலந்த திகிலாகவும், இரண்டாவது பாதி திகில் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளாகவும் இருக்கிறது. பொழுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தாலும், படம் முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் காட்சிகளுக்கு சுந்தரமூர்த்தியின் இசை உயிர்ப்பாக அமைந்திருக்கிறது.
சுந்தரமூர்த்தி.கே.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பு போன்ற மெல்லிய இசை திகிலை கூட்டுகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `ஐரா' திகில்.
சர்ஜூன். கே.எம். இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐரா' படத்தின் முன்னோட்டம். #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஐரா'.
நயன்தாரா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சுதர்சன் சீனிவாசன், இசை - சுந்தரமூர்த்தி கே.எஸ்., படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், கலை - சிவசங்கர், ஸ்டண்ட்ஸ் - மிராக்கிள் மைக்கேல் ராஜ், ஆடை வடிவமைப்பாளர் - பிரீத்தி நெடுமாறன், நடனம் - விஜி சதீஷ், பாடல்கள் - தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக், ஆடியோகிராஃபி - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் - கோட்டபாடி ஜே.ராஜேஷ், கதை, திரைக்கதை - பிரியங்கா ரவீந்திரன், இயக்கம் - சர்ஜூன். கே.எம்.
படம் பற்றி இயக்குநர் சர்ஜூன் பேசும் போது,
ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். நயன்தாராவின் 63-வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
ஐரா மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28 🦋
ஐரா டிரைலர்:
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X