search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்தார் வல்லபாய் பட்டேல்"

    பிரதமர் மோடி தன்னை மேன்மைப்படுத்தி காட்டுவதற்காக மகாத்மா காந்தியையும் சர்தார் வல்லபாய் பட்டேலையும்கூட இழிவுப்படுத்துவார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #demeanGandhi #demeanPatel #RahulGandhi #Kartarpur
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நேற்று ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.

    அதனால், 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன் என்று கூறினார்.

    இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    ‘அந்த காலத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு போதிய ஞானம் இல்லாததால் கர்த்தார்பூரை இந்தியா இழந்து விட்டதாக மோடி இப்போது கூறுகிறார்.



    இறுதியாக தற்போது மோடியின் மனதில் உருவாகியுள்ள எண்ணத்தின்படி, தன்னை மேன்மைப்படுத்தி காட்டுவதற்காக மகாத்மா காந்தியையும் சர்தார் வல்லபாய் பட்டேலையும்கூட இழிவுப்படுத்துவார்’ என அந்த பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்றபோது அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைய வேண்டும். பிரிவினைக்காக காத்திருந்த பாகிஸ்தான் என்ற புதிய நாட்டுக்கு எந்தெந்த பகுதிகள் செல்ல வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்துவதில் பின்னர் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக பதவியேற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #demeanGandhi #demeanPatel #RahulGandhi #Kartarpur
    குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தியாவின் முதல் துணை பிரதரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் தலைவருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிக, மிக உயரமான, பிரமாண்ட சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு சிலை தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது.

    தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி சிலை திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.



    சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami

    குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். #SardarPatelstatue
    அகமதாபாத்:

    சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.

    குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.


    2,603 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குஜராத் மாநில அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

    ஒருமைப்பாட்டுச் சிலை என பெயரிடப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் சுமார் ஐந்தாண்டுகளில் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி திறந்து வைப்பார் என குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று தெரிவித்துள்ளார். #SardarPatel statue #SardarPatelstatue
    ×