search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுடேஸ்வரி அம்மன்"

    சங்கராபுரம் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கத்தி போடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். அந்த வகையில் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு இக்கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிலையில் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கத்தி போடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கோவிலில் விரதம் இருந்த திரளான பக்தர்கள், தங்கள் உடலில் கத்தி போட்டுக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் மூக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 
    ×