search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம்"

    • தமிழக போலீசார் அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
    • இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மடுகரையில் கலால்துறை அனுமதி பெற்று, ஆண்டியர்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் சாராயக் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பட்டாம்பாக்கம்-மடுகரை சாலையில் தென் பெண்ணையாறுசோதனைச் சாவடியில் இருந்த தமிழக போலீசார் அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.

    அவரிடம் இருந்து 10 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மடுகரையில் உள்ள சாராயக்கடையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மடுகரை சாராயக்கடைக்கு சென்று அங்கிருந்த 40 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து எடுத்து செல்ல முயன்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், மடுகரை சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழக போலீசாரை முற்றுகையிட்டு சாராயக் கடையில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என காரை மறித்து தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் பிடிப்பட்டால் அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, தடை செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார். அதற்கு புதுச்சேரி போலீசார் எங்களது அனுமதியில்லாமல் எப்படி சாராய கடையில் இருந்து சாராய பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எடுத்து செல்லலாம் என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தமிழக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்ட போது, புதுச்சேரி போலீசாரை உரிய அனுமதியில்லாமல் தமிழக போலீசார் அத்துமீறி புதுச்சேரி கலால்துறை அனுமதியுடன் நடத்தி வரும் சாராயக் கடையில் புகுந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய முயன்றது தவறு என்று தெரிவித்தார்.

    • கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
    • கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன.

    இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.

    அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25-ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.

    அதன் பிறகு சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக்கடைகளும், 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஏலம்போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783-க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877-க்கும், லிங்கா ரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது.

    இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1 என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக்கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.

    • மது மற்றும் கஞ்சாவினால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.
    • 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் மரணிக்கின்றனர்.

    போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.

    மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.

    மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர். மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.

    2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

    • சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது.
    • போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேல்பட்டி:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது.

    சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் போலீஸ் அடிக்கடி இந்த கிராமத்திற்கு ரோந்து வருவார்கள். சாராயம் குடிப்பதற்கும் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரையும் கைது செய்து, அதனை முற்றிலுமாக ஒழித்தனர்.

    மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டது என்று பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகை வைத்தனர்.

    மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    • போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    தமிழக அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அதையும் மீறி மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி அருகில் உள்ள கிராமங்களில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலை பகுதியில் போலீசார் கண்காணிப்பையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இந்த கள்ளச்சாராயம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் மலை கிராமங்களில் விற்கப்பட்டு வருகிறது. அதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் குடிநீர் போன்று ½ லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. மேலும் ஆத்தூர் டவுன் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ½ லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து குடிநீர் போல விற்பனை செய்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (29) என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் இருந்து 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாத காலமாக இதே போல விற்பனை செய்து செய்து வந்ததும், பொது மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க குடிநீர் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்பனை செய்ததாகவும், ½ லிட்டர் சாராயத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததும், இதை வாங்கியவர்கள் அந்த பகுதியில் நின்றே குடிநீர் போல சாராயத்தை குடித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி கீழ்கவரப்பட்டை சேர்ந்த நாகையன் என்பவரது மகன் அரிச்சந்திரன் (வயது 56) என்பவர் பாண்டிச்சேரி சாராய பாக்கெட் வைத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அரிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

     நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்

    வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்

    கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)

    ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதி யில் அரசம்பட்டை சேர்ந்த அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அஞ்சலையை கைது செய்து, அவரிடமிருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ரோந்து பணியின் போது சிக்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அருகேயுள்ள நெல்லிக்குப்பம், சயனபுரம், ஆட்டுப்பாக்கம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆட்டுப்பாக்கம் பத்ரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் செல்லும்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வீட்டின் பின்புறம் மறைவான பகுதியில் பிளாஸ்டிக் கவர்களில் மொத்தம் 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் இவர் நெமிலி அடுத்த சயனபுரம், பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஈஸ்ட்ராஜ் வீட்டு அருகில் புதுவையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
    • ஈஸ்ட் ராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி கீழ்கவரப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்ட்ராஜ் (வயது 46) என்பவர் தனது வீட்டு அருகில் புதுவையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பண்ருட்டி எஸ்.டி.ஓ.க்ரைம் டீமை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீ சார் ஈஸ்ட்ராஜை பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து ஈஸ்ட் ராஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தார்.

    • சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 220 லிட்டர் வெளிமாநில சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மதுபாட்டில்களை கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டி ல்கள் காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நீலகண்டன் தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் நாகரெ த்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர் அருள், முதன்மை காவலர்கள் மனோகர், மகேஷ், பாலகுரு ஆகியோர் செம்பனா ர்கோவில் காவல் சரகம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 672 வெளிமாநில மதுபாட்டி ல்கள் மற்றும் பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபி டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மது கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட காரையும், 672 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் வெளி மரிநல சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

    இது தொடர்பாக மயிலாடுதுறை அருகே பாண்டூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவ ரை கை செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • பைக் பறிமுதல்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும், வெளிமாநில மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வாணி யம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் தகரகுப்பத்தை அடுத்த தரைக் காடு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு இடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். சாராயத்தை பதுக்கி வைத்திருந்த சங்கர் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×