search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம் விலை சரிவு"

    தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது. காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக சற்று உயர்ந்து வந்தது. ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இந்த நிலையில், தற்போது தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம்,  மாரண்டஅள்ளி,  அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் மிதமான விளைச்சல் அடைந்தும், வெளியில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் தற்பொழுது  மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக  கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.20-க்கும் குறைவாகவே வாங்கி செல்கின்றனர். இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும்போது கிலோ ரூ.150 கொடுத்து வாங்கி பயிரிட்டு, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை வைத்து அறுவடை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுக்கக்கூட முடியவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.
    ×