search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமோனா ஹாலெப்"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா, சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டார். 

    ஒசாகா 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சிமிட்லோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 



    இதேபோல், ருமேனியா நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியா நாட்டின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். ஹாலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டோம்ஜனோவிச்சை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #SimonaHalep #KikiBertens
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 7-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்சை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற சிமோனா ஹாலெப்பால் அந்த முன்னிலையை நீட்டிக்க முடியவில்லை. அபாரமாக செயல்பட்ட கிகி பெர்டென்ஸ் சரிவில் இருந்து மீண்டு வந்ததுடன் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை சாம்பியனான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பெர்டென்ஸ் ஒரு செட்டை கூட இழக்காமல் இந்த பட்டத்தை வென்று அசத்தினார். 27 வயதான பெர்டென்ஸ் வென்ற 9-வது பட்டம் இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் சிமோனா ஹாலெப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 20 வயதான கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சுடன் மோதினார். இதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரபெல் நடால் 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 4-வது முறையாக சிட்சிபாஸ்சுடன் மோதிய ரபெல் நடால் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    தோல்விக்கு பிறகு ரபெல் நடால் அளித்த பேட்டியில், ‘இந்த இரவு எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெளிவாக தெரிந்து இருந்தாலும் அதனை திறம்பட செய்ய இயலவில்லை’ என்று தெரிவித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6 (7-2), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள டோமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரநிலையில் 3-ம் பிடித்த ருமேனியாவின் சிமோனா ஹெலாப், தரநிலையில் 7-ம் இடத்தை பிடித்த நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.



    இதில் கிகி பெர்ட்டென்ஸ் ஆட்டத்திற்கு சிமோனா ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் பெர்ட்டென்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
    மாட்ரிட் ஒபன் டென்னிஸில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் ஆஷ்லே பார்ட்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



    முதல் ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 3-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டியை எதிர்கொண்டார். இதில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸில் நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 12-ம் நிலை வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில் கிகி பெர்ட்டர்ன்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-0, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



    முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் சான்ஸ்னோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    துபாய் டென்னிஸ் காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார். #Halep #DubaiOpen
    துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் எலீனா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் நவரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை சுவிட்சர்லாந்தின் பென்சிக் 4-6, 6-4 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் பிலிஸ்கோவாவை தைவானின் ஹஷ்யேயை தோற்கடித்தார். இதேபோல் அரைஇறுதிக்கு குவிட்டோவா (செக்குடியரசு) தகுதி பெற்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.

    இந்த போட்டி செரீனாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை செரீனா 1-6 என எளிதில் இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட செரீனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.



    நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதால், சாம்பியன் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையில் செரீனா உள்ளார்.
    சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் முதல் ஆட்டத்திலேயே நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலேப் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #SimonaHalep
    ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டம் என்று கருதப்படும் சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலேப் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லெய்க் பேர்ட்டி-யை எதிர்கொண்டார்.

    இதில் சிமோனா ஹாலேப் 4-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 2-ம் இடம் பிடித்த சிமோனா, அக்டோபர் மாதம் நடைபெற்ற டென்னிஸ் இறுதித் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய முதல் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் காயத்தால் போட்டியில் இருந்து விலகினார். #ChinaOpen #SimonaHalep
    சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத துனிசியாவின் ஓன்ஸ் ஜெபெயுரை எதிர்கொண்டார்.



    சிமோனா ஹாலெப்பிற்கு ஓன்ஸ் ஜெபெயுர் கடும் நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். முதல் செட்டின்போது சிமோனா ஹெலெப்பிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் பிரிவில் ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #USOpen2018 #SimonaHalep #KaiaKanepi
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியை சந்தித்தார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிமோனா ஹாலெப் 2-6, 4-6 என்ற நேர்செட்டில் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சிமோனா ஹாலெப் கடந்த ஆண்டும் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் சுற்றுடன் நடையை கட்டி இருந்தார்.



    மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.  #USOpen2018 #SimonaHalep #KaiaKanepi
    டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் கனெக்டிகட் ஓபனில் இருந்து விலகியுள்ளார். #SimonaHalep
    உலக டென்னிஸ் தரவரிசையில் சிமோனா ஹாலெப் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த வாரம் நடைபெற்ற சின்சினாட்டி ஒபன் இறுதிப் போட்டியில் கிகி பெர்ட்டென்ஸ் இடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவிறவிட்டார்.

    வருகிற 27-ந்தேதி கிராண்ட் ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு சிறப்பான வகையில் தயாராகுவதற்காக கனெக்டிகட் ஓபனில் இருந்து விலகியுள்ளார்.



    இதுகுறித்து ஹாலெப் கூறுகையில் ‘‘அமெரிக்க ஓபனுக்கு திரும்ப நேரம் தேவைப்படுகிறது. நான் இந்த தொடரில் விளையாட உண்மையிலேயே அதிக ஆர்வமாக இருந்தேன். ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கி என்னை பார்க்க வந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னுடைய காலில் அதிக வலி இருப்பதாக உணர்கிறேன். இதனால் ஓய்வு தேவைப்படுகிறது’’ என்றார்.
    அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் #Federer #Djokovic
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், 10-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4-6, 4-6 என ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 1-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பெர்ட்டென்ஸ் கடுமையான அளவில் பதிலடி கொடுத்தார். இரண்டு பேரும் மாறிமாறி கேம்ஸை கைப்பற்ற ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது.



    இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(8) - 6(6) என சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். இதனால் 1-1 என இருவரும் சமநிலை பெற்றதால் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டை கைப்பறியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்கினார்கள்.

    ஆனால் சிமோனா ஹாலெப் 2-6 என எளிதில் சரணடைந்தார். இதனால் பெர்ட்டென்ஸ் 2-6, 7(8) - 6(6), 6-2 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
    ×