search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன காதல் ஜோடி"

    சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் சீன நாட்டு காதல் ஜோடியான யன், ரூபிங் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். #ChineseCouple
    சீர்காழி:

    சீர்காழி அருகே காரைமேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனியாக கோயில் அமைந்துள்ளது. மேலும், இக்கோவிலில் சிவன். முருகன், விநாயகர் கோயில்களும் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலுக்கு வந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து செல்கின்றனர்.

    சீனா பெய்ஜிங்கை சேர்ந்த யன் என்பவர் மருத்துவதுறையில் பணிபுரிந்து வருகிறார். சீனா சங்காயைச் சேர்ந்த ரூபிங் அழகுகலை நிபுணராக இருந்து வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பட்டு நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஒளிலாயத்தை தேர்வு செய்து அங்கு வந்தனர். அருள், கணேஷ், செந்தில், பழனி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யன், ரூபிங் திருமணம் நாதஸ்வரம், மேளக்கச்சேரி இசைக்க மணமக்கள் பட்டு வேட்டி, பட்டு புடவை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு யன், ரூபிங் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது பலரும் அர்ச்சகை தூவி ஆசி வழங்கினர். பின்னர் இருவீட்டார் சார்பில் மணபெண்ணிற்கு நெற்றி பட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு திரண்டிருந்தவர்கள் அன்பளிப்பு பொருட்களை வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கு அறுசுவையுடன் விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடி முத்து, செந்தமிழன், மாமல்லன் செய்திருந்தனர். #ChineseCouple
    ×