search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனர்கள் மருந்து"

    கென்யாவில் சீனர்களின் மருந்துக்காக கழுதைகள் கடத்தி கொல்லப்படும் தகவல் வெளியாகியுள்ளது. #Kenya
    நைரோபி:

    கென்யாவில் பாரம் இழுத்தல் சுமைகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு சமீப காலமாக கழுதைகள் திருடப்பட்டு வருகின்றன.

    அது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மருந்துக்காக கழுதைகள் கடத்தி கொல்லப்படும் தகவல் கிடைத்தது. உடல் நல மேம்பாட்டுக்காக சீனாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் கழுதைகளின் தோல் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கழுதைகளின் தோலில் இருந்து அதற்கான மருந்தின் முக்கிய மூலக்கூறு கிடைக்கிறது. அதற்காக கழுதைகள் பெருமளவில் கடத்தி கொல்லப்படுகின்றன.

    இதேபோன்று மற்ற ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கழுதை தோல்கள் சீனாவுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இதனால் கழுதை இனம் அழியும் அபாயம் உள்ளது. #tamilnews
    ×