என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சுதந்திர போராட்ட வீரர்கள்
நீங்கள் தேடியது "சுதந்திர போராட்ட வீரர்கள்"
டெல்லி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுதந்திர போராட்ட தியாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். #FreedomFighters
புதுடெல்லி:
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று வெள்ளையனே வெளியேறு போராட்டம். இந்த போராட்டம் 1942, ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு அவர்கள் தாயகம் திரும்பினர். அன்றிலிருந்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 76வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் 89 சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட தியாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளுடன் கலந்துரையாடினேன். அவர்கள் நாட்டிற்கு செய்த மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.
×

X