search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி"

    சூதாட்டத்தைப் போல் விபசாரத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே யோசனை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்ட பந்தயங்களை சட்டபூர்வமாக்கலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான என்.சந்தோஷ் ஹெக்டேவிடம் நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது:-

    அது நல்ல சிபாரிசு. சட்டவிரோத சூதாட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. எனவே, அதை சட்டபூர்வமாக்கும்போது, 75 சதவீத சட்டவிரோத சூதாட்டங்கள் நின்று விடும்.

    சில தீய பழக்கங்களை சட்டத்தால் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைப்பவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதாக அர்த்தம். அப்படி கட்டுப்படுத்த நினைத்தால், அது சட்டவிரோதமாக நடப்பது பெருகும். மதுவிலக்கு விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம்.

    விபசாரத்தையும் சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால், ‘ஆம்’ என்றே சொல்வேன். விபசாரம் எல்லா இடத்திலும் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கி, அத்தொழிலில் உள்ளவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்தால், விபசாரம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×