என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சூதாட்ட புகார்
நீங்கள் தேடியது "சூதாட்ட புகார்"
இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே சூதாட்ட புகாரில் நீக்கப்பட்டதன் மூலம் ஒரே மாதத்தில் 3 வீரர்களை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. #ICC #DilharaLokuhettige
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணி சூதாட்ட பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.
அந்நாட்டின் முன்னாள் அதிரடி வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் புகாரை கூறி இருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 31-ந்தேதி இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரரும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சா சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே மீதும் மேட்ச் பிக்சிங் புகார் கூறப்பட்டு அவரை ஐ.சி.சி. சஸ்பெண்டு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஓவர் ‘லீக்’ போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஆல்ரவுண்டரான தில்கரா சூதாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.சி.சி. ஊழல் தடுப்புக்குழு விசாரித்தது.
ஆட்டத்தின் போக்கை மாற்றி முடிவை நிர்ணயம் செய்தல், வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விதிமீறலில் ஈடுபட வலியுறுத்தியது போன்ற புகார்கள் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.
ஆட்டத்தில் விளையாடாமலேயே தில்கரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. அவகாசம் வழங்கி உள்ளது.
38 வயதான தில்கரா 9 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். #ICC #DilharaLokuhettige

பாகிஸ்தானில் சூதாட்ட புகாரில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். #DanishKaneria #Pakistan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறிவந்த டேனிஷ் தற்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தனை நாட்கள் தனது தந்தைக்காகவே இந்த உண்மையை மறைத்து வந்ததாகவும், பொய்களுடன் நீண்ட நாட்கள் வாழ வலிமை இல்லாததால் தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #DanishKaneria #Pakistan

இந்த நிலையில், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாடியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் சுமத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறிவந்த டேனிஷ் தற்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தனை நாட்கள் தனது தந்தைக்காகவே இந்த உண்மையை மறைத்து வந்ததாகவும், பொய்களுடன் நீண்ட நாட்கள் வாழ வலிமை இல்லாததால் தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #DanishKaneria #Pakistan
சூதாட்ட புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. #SpotFixing #NasirJamshed
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் சிக்கியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். #SpotFixing #NasirJamshed
×

X