என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சென்னை அணி
நீங்கள் தேடியது "சென்னை அணி"
குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதாக டேவிட் வில்லே கூறினார். #IPL2019 #CSK #DavidWilley
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான டேவிட் வில்லே இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர் அணியுடன் இணைவது தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் குடும்ப விஷயம் காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். ஏற்கனவே காயத்தால் நிகிடி ஆட முடியாத நிலையில், சென்னை அணிக்கு இன்னொரு பின்னடைவாக டேவிட் வில்லேயும் விலகி இருக்கிறார். #IPL2019 #CSK #DavidWilley

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற புரோ கைப்பந்து 2-வது கட்ட போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. #ProVolleyball
சென்னை:
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை) எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தோடு களம் புகுந்த சென்னை அணி தடுமாறியது. முதல் 3 செட்டுகளையும் வரிசையாக கோட்டை விட்ட சென்னை அணி கடைசி இரு செட்டை மட்டும் வசப்படுத்தி ஆறுதல் அளித்தது. முடிவில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 14-15, 8-15, 10-15, 15-10, 15-10 என்ற செட் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அதே சமயம் 3 தோல்விகளுக்கு பிறகு மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சை சந்திக்கிறது. இது தான் சென்னை அணிக்கு கடைசி லீக் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். தோற்றால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை. #ProVolleyball

‘புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது’ என்று அந்த அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார். #ProVolleyballLeague
சென்னை:
முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.
புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.
போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார். #ProVolleyballLeague

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #ISL2018 #ChennaiyinFC
கவுகாத்தி:
5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியது.
3-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் காலு உச்சே கோல் அடித்தார். 13-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் கொல்கத்தா அணியின் ஜான்சன் தலையால் முட்டி கோலாக்கினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 50-வது கோல் இதுவாகும். 17-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கார்லோஸ் சலோம் கோல் திருப்பினார். முதல் பாதியில் கொல்கத்தா முன்னிலை வகித்தது.
பிற்பாதியில் பந்து அதிக நேரம் சென்னை அணியினரின் வசம் சுற்றினாலும் அதிர்ஷ்டம் இல்லை. முடிவில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. எதிரணி கோல் எல்லையை நோக்கி சென்னை அணி வீரர்கள் அடித்த 5 ஷாட்களில் ஒன்றை தவிர மற்றவை வீணானது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை சந்தித்த 4-வது தோல்வி இது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ChennaiyinFC

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன. #ISL2018
புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3), 3-வது ஆட்டத்தில் கவுகாத்தி அணியிடமும் (3-4) அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் புனேவுடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வியும், 3-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் கேரளாவுடன் டிராவும் கண்டது.
கவுகாத்தி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றாலும், தடுப்பு ஆட்டத்தில் செய்த தவறால் தோல்வியை சந்தித்தது. தடுப்பு ஆட்டத்தில் சென்னை அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். சென்னை, டெல்லி அணிகள் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
சென்னை, டெல்லி அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் டெல்லி அணி 4 முறையும், சென்னை அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 41-வது மற்றும் 43-வது நிமிடத்திலும், மிகு 64-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். புனே அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் அந்த அணி டிரா கண்டு இருந்தது. #ISL2018

மாவட்டங்கள் இடையேயான மாநில ஜூனியர் கூடைப்பந்து தொடருக்கான சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் இடையேயான மாநில ஜூனியர் (13 வயதுக்குட்பட்டோர்) கூடைப்பந்து போட்டி இன்று முதல் 21-ந்தேதி வரை விருதுநகர் மற்றும் தஞ்சையில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான சென்னை மண்டலம் 1 அணியை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் அறிவித்துள்ளார்.
அணி விவரம் வருமாறு:-
சிறுவர்:- திவாகர், கமலேஷ் சாய், மிருதுன்வேல், நிஷித், பிரணவதன், சச்சின் ஆதித்யா, சரண், சஞ்சய், தருண், தவீஷ் விவேக், திவேஷ், விமலன். பயிற்சியாளர்- சஞ்சய் குமார், உதவி பயிற்சியாளர்- அருணாச்சலம், மானேஜர்- லோகநாதன்.
சிறுமியர்:- காயத்ரி, ஹூசைனா, உசேன், ஜனி ஆஸ்டின், ஜெயஸ்ரீ, மது அன்னம், மஞ்சுளா, மோனிஷா, நில்தி, ரியாமேனன், வர்ஷினி, சுவேரா, சுமேஷ், வானிஸ்ரீ. பயிற்சியாளர்- விக்னேஷ், உதவி பயிற்சியாளர்- ஹேமலதா.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
சென்னை:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. மெய்ல்சன் ஆல்வ்ஸ் தலைமையிலான சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. மந்தர் ராவ் தேசாய் தலைமையிலான கோவா அணி தனது முதலாவது ஆட்டத்தில் கவுகாத்தியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.
இந்த சீசனின் முதல் வெற்றியை ருசிக்க இரண்டு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு பலம் சேர்க்கும். சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘பெங்களூருவுக்கு எதிராக எங்கள் அணி சிறப்பாக தான் செயல்பட்டது. இருப்பினும் நாங்கள் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக முழுமை செய்யவில்லை. அந்த தவறை வரும் ஆட்டங்களில் சரி செய்வோம். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கோலாக மாற்றுவதில் கோவா அணியினர் சிறந்தவர்கள். எனவே தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் சென்னையும், 3-ல் கோவாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa

மாவட்டங்கள் இடையேயான மாநில இளைஞர் கூடைப்பந்து போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாவட்ட மண்டல-1 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #YouthBasketball
சென்னை:
மாவட்டங்கள் இடையேயான மாநில இளைஞர் (16 வயதுக்குட்பட்டோர்) கூடைப்பந்து போட்டி நாளை (26-ந்தேதி) முதல் 29-ந்தேதி வரை திருவாரூரில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட மண்டல-1 அணியை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் அறிவித்துள்ளார். அணி விவரம்:
சல்மான் பராஸ் (கேப்டன்), ஆதித்ய சீனிவாஸ், அரவிந்த், திலீப் குமார், ஹர்சவர்தன் ரெட்டி, கார்த்திகேயன், காமேஸ் ராகுல், ஷியாம் ராஜா, தன்ஷிக், விக்கி சாம் பீட்டர், விஸ்வா.
பயிற்சியாளர்: செந்தில் செல்வன், உதவி பயிற்சியாளர்: அருணாச்சலம், மானேஜர்: லோக நாதன். #YouthBasketball

×

X