search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஓபன் மகளிர் கபடி"

    24 அணிகள் பங்கேற்கும் சென்னை ஓபன் மகளிர் கபடி போட்டி நாளை தொடங்கி இரண்டு நாட்கள் ராணிமேரி கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
    சென்னை:

    கபடி ஸ்டார் மற்றும் ராணிமேரி கல்லூரி சார்பில் சென்னை ஓபன் மகளிர் கபடி போட்டி நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி நாளையும் (4-ந்தேதி), நாளை மறுநாளும் (5-ந்தேதி) ராணிமேரி கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    சர்வதேச கபடி சம்மேளன நிறுவன தலைவரான ஜனார்த்தன்சிங். கெலாட்டின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் இந்தப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்கின்றன.

    எத்திராஜ், கபடி ஸ்டார், தமிழ்நாடு போலீஸ், ராணிமேரி கல்லூரி, சாய் (தர்மபுரி), தமிழ் தலைவாஸ், ஏ.எம்.ஜெயின் (மீனம்பாக்கம்) போன்ற முன்னணி அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டிகள் நடக்கிறது.

    இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.74 ஆயிரமாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2-வது முதல் 6-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    நாளை காலை 10.30 மணிக்கு இந்தப்போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி அமைப்பாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் செய்து வருகிறார்.
    ×