search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை திருட்டு"

    சென்னை அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiTheft
    அம்பத்தூர்:

    அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் வைத்துள்ளார்.

    இவருடைய மனைவி, ஸ்ரீதேவி. கணவன்-மனைவி இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் வீட்டு வேலையாட்கள், தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிக்க கேட் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம், ரூ.1லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை-பணம் தப்பியது.


    இதுபோல், அதே பகுதி 26 -வது தெருவில் வசித்து வருபவர் முரளிகிருஷ்ணன். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து தப்பினர்.

    அண்ணாநகர் எல் பிளாக் 21-வது தெருவில் மேக்ஸ் ப்யூர் வாட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை சுருட்டினர். மேலும் கண்காணிப்பு கேமராவையும் உடைத்து கொண்டு சென்று விட்டனர்.

    அண்ணாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiTheft
    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது.

    நேற்று 3 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா டான்சரான சவிதா தனது தாலி செயினை வீட்டில் கழற்றி வைத்து விட்டு தூங்கினார். காலையில் கண்விழித்த போது அதனை காணவில்லை. அவரது 15 பவுன் தாலி செயினை யாரோ திருடிச் சென்று உள்ளனர்.

    கொளத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்த ரூபா என்ற பெண்ணிடம் 8 பவுன் செயினும், வில்லிவாக்கத்தில் அகிலா என்பவரிடம் 25 பவுன் தாலி செயினும் பறிக்கப்பட்டுள்ளது.

    கரூர் காகித ஆலையில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் முருகேசன் சென்னையில் தனது நண்பரை பார்க்க வந்தார். பாண்டி பஜாரில் அவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
    சென்னை அசோக்நகரில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவர் வேலை காரணமாக சென்னை வந்தார். அப்போது அசோக் நகர், சாலையில் உள்ள சிக்னல் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற இளவரசு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம வாலிபர் இளவரசுவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

    இதுகுறித்து அசோக் நகர் போலீசில் இளவரசு புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சங்கர் கொள்ளைபோன செல்போன் ஐ.எம்.இ நம்பரை கொண்டு ஆய்வு செய்து அதை பயன்படுத்தி வந்த கண்ணம்மாபேட்டை கார்ப்பரே‌ஷன் காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது19) என்பவரை கைது செய்தார்.

    அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
    ×