என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை மெட்ரோ"
- கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.
சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.
மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற உள்ளது. இப்பணி காரணமாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சோதனை அடிப்படையில், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், சுப்பிரமணியம் தெருவில் திரும்பி வீர சாவா்க்கா் சாலை வழியாக செல்லலாம். அதேபோல, ஜவஹா் சாலையில் உள்ள மேற்குத் தெருக்களான ஆசாத் தெரு, திருவள்ளுவா் தெரு, ஜீவானந்தன் தெரு ஆகியவை மூடப்படும்.
இந்த தெருக்களிலிருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கம்பா் தெரு, இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் கவுதமா் தெரு, அசோகா் தெரு வழியாக ஜவஹா் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மேலும், ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாகனங்கள், எஸ்.எஸ்.வி.கோவில் சாலை, வீர சாவா்க்கா் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
- மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வாரதி இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோ ரெயிலில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணிகள் ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
- இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.
சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.
மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.
இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது.
- சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை :
பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.
நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. இதனால் சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக க்யுஆர் குறியீடு, வாட்ஸ்அப், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான ஆன்லைன் முறைகளில் பயணச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டது. இதனால் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிர்வாகம் சிஎம்ஆர்எல்-ல் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.
Due to technical issue,
— Chennai Metro Rail (@cmrlofficial) April 8, 2024
Online ticketing including mobile app are not presently working.
Passengers are requested to purchase tickets from metro Station counters.
Rectification works are in progress.
CMRL regrets the inconvenience caused.
Further information will be updated soon.
The technical glitch has been rectified.
— Chennai Metro Rail (@cmrlofficial) April 8, 2024
Online ticketing including CMRL mobile app are now working.
All ticketing modes including Singara Chennai Card, CMRL Travel Cards are working normally.
CMRL regrets the inconvenience caused.
- தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
- அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
இதனால் அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய பாதையில் பயணிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் மேம்பாலம், குறுக்காக கீழே செல்லும் மெட்ரோ ரெயில்களை பார்த்து ரசிக்க முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இதுவரை இல்லாத உயரத்திற்கு கிண்டியில் மிக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மிக உயரமான தூண்களை கட்டமைக்கும் பணி சவாலாக உள்ளது எனவும் இந்த வேலையை லார்சன் அண்ட் டூப்போரா நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.
இதுகுறித்து திட்ட இயக்குனர் டி.அர்ச்சுணன் கூறியதாவது:-
விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு மேலே இந்த மேம்பாலம் அமைவது பெரும் சவாலான பணியாகும்.
'பேலன்ஸ் கான்டிலீவர்' என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் காண்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது.
சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் போது தரையில் குறைந்த இடவசதி இருப்பதாலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூண்களை மிக உயரத்தில் கட்ட வேண்டும். இந்த முறையில் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் மிக அதிகம். முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் அதே முறையை பயன்படுத்தி தூண்கள் கட்டப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி எல் அண்ட் டி திட்ட மேலாளர் கிருஷ்ண பிரபாகர் கூறியதாவது:-
சமச்சீரான கேண்டிலீவர் கட்டுமானத்தில் கத்திப்பாரா சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு பட்ரோடு மற்றும் ஆலந்தூர் இடையே கூர்மையான வளைவை உருவாக்க சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 125 மீட்டர் சுற்றளவுக்கு இந்த வளைவலான பாதை அமைகிறது.
கத்திப்பாரா மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டர் என்றாலும் சென்னை மெட்ரோ ரெயிலின் தாழ்வாரம் 20 மீட்டர் உயரத்தில் செல்கிறது. தூண்கள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்துடன் இருப்பதால் கான்கிரீட் அல்லது கட்டிட இடிபாடுகள் எவர் மீதும் விழாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
மிக உயரமான தூண்கள் அடித்தளம் கத்திப்பாராவில் உள்ள பால்வெல்ஸ் சாலையில் உள்ளது. இது சாதாரண தூண் போல் இல்லாமல் மிகப்பெரியது.
உயரமான தூணின் அடித்தளம் 1.5 மீட்டர் விட்டம் மற்றும் 12 பைல்கள் கொண்டதாகவும் தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதால் தூண் கட்டுவதற்கான முக்கிய பணிகள் தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
- 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
- அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
* அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ ரெயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும்.
* முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024 வரை
* இரண்டாவது மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை
* மூன்றாவது மாதம் 15.02.2024 முதல் 15.03.2024 வரை
இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும்.
பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
- பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.
சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தெற்கு ரெயில்வேயின் மின்சார ரெயில் சேவை நிறுத்தம்.
- சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.
சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரெயில்வே சேவைகள் நாளை காலை 10.18 மணி முதல் மதியம் 14.45 மணி வரை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.
நீட்டிக்கப்பட்ட சேவை விவரம்:
நீல வழித்தடம்: விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 08.00 முதல் 11.00 முதல், மாலை 05.00 முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
பச்சை வழித்தடம்: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - பரங்கிமலை மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் ரெயில் இயக்கப்படுகிறது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - விமான நிலையம் (வழி- கோயம்பேடு) மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
- தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு.
- இரு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வர். இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.
அதன்படி, ஆயுத பூஜை தினமான 23.10.2023 (திங்கள்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை தினமான 24.10.2023 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 20.10.2023 மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.
நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 20.10.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 21.10.2023 (சனிக்கிழமை) என இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்