search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செரீனா வில்லியம்ஸ்"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரஷியாவைச் சேர்ந்த விடாலியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 3 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவை சேர்ந்த விடாலியா டியாட் சென்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில் செரீனா 2-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 4-வது இடத்தில் இருப்பவரான பெர்ட்டென்ஸ் (பிரான்ஸ்) செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 2-வது நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    4-ம் நிலை வீரரான டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டோமி பவுலை 6-4, 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.
    செம்மண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. பெண்கள் பிரிவில் செரீனா சாதனைப் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் ஒசாகாவும் (ஜப்பான்) பட்டம் பெற்றனர்.

    இந்த ஆண்டின் 2-வது கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ஜூன் 9-ந்தேதிவரை இந்த போட்டி நடக்கிறது.

    உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஒசாகா, நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப், கரோலினா, கெர்பர் மற்றும் 10-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.



    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்து இருக்கிறார்.

    ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்திலும், ஜோகோவிச் 15 பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3 முறை கைப்பற்றி உள்ளார். அவருக்கு ஒசாகா, சிமோனா ஹாலெப், முகுருஜா போன்ற முன்னணி வீராங்கனைகள் கடும் சவாலாக இருப்பார்கள்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 7-வது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இதன் மூலம் அவரது 24-வது கிராண்ட் சிலாம் கனவு தகர்ந்தது.



    மற்றொரு காலிறுதியில் 4-ம்நிலை வீராங்கனை ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்டோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். அவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

    மற்றொரு காலிறுதியில் கிவிட்டோவா (செக்குடியரசு)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் ஒரு காலிறுதியில் ஜோகோவிச் (செர்பியா)- நிஷிகோவி (ஜப்பான்) மோதுகிறார்கள். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.

    இந்த போட்டி செரீனாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை செரீனா 1-6 என எளிதில் இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட செரீனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.



    நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதால், சாம்பியன் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையில் செரீனா உள்ளார்.
    செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று உலக சாதனையை சமன் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Serena
    இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.

    ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டொமினிக் தியெம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்) போன்ற முன்னணி வீரர்கள் இதில் விளையாடுகிறார்கள்.

    பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகியோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ளனர். இந்த 4 பேரும் சேர்ந்து கடந்த 55 கிராண்ட் சிலாம் போட்டிகளில் (2015 பிரெஞ்ச் ஓபனில் இருந்து) 50 பட்டங்களை வென்று முத்திரை பதித்துள்ளனர்.

    இவர்களின் ஆதிக்கம் இந்த ஆண்டிலும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறையில் உள்ள வீரர்கள் இந்த ஆண்டில் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

    கடந்த ஆண்டில் ஜோகோவிச் அமெரிக்க ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், ரபெல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் ரோஜர் பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தனர்.

    பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கிறார். குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கா ஓபனில் கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.

    தற்போது வரை செரீனா 23 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இன்னும் ஒரு பதக்கம் வென்றால் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை மார்கரெட் உடன் பகிர்ந்து கொள்வார். இதனால் செரீனா 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடவில்லை. #Serena
    அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு குழந்தை பெற்ற பிறகு, மீண்டும் டென்னிஸ் களத்தில் களம் இறங்கியுள்ளார்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செரீனா, பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்நதார்.

    ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவிற்கு எதிராக விளையாடும்போது நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் செரீனாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.



    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடருக்குப்பின் செரீனா இன்னும் களம் இறங்காமல் இருக்கிறார். நாளை சீனா ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. இதில் செரீனா இடம்பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் பெயர் இல்லாமல் 64 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்கா தொடரில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வில் இருந்து செரீனா இன்னும் மீளாததால் தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. #USOpen #SerenaWilliams
    வாஷிங்டன் :

    நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

    இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

    முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

    2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.

    3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

    இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் (10 ஆயிரம் அமெரிக்க டாலர்), பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் (4 ஆயிரம் அமெரிக்க டாலர்), டென்னிஸ் ராக்கெட்டை வீசி எரிந்ததற்கு ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் (3 ஆயிரம் அமெரிக்க டாலர்) என மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.



    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக ரூ.13 கோடி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen #SerenaWilliams
    அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    நியூயார்க்:

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.

    இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.



    இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா. 

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ், ஸ்டீபன்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpen2018
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் எம் எலினேட்டை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஜ் 6-4, 6-0 என எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான ஜூலியா ஜார்ஜஸ் 6-2, 6(5)-7(7), 6-2 என கலின்ஸ்கயாவை வீழ்த்தினார். 8-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவோ 6-4, 7(7)-6)4) என வெற்றி பெற்றார். 16-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5, 6-3 என வெற்றி பெற்றார். 3-ம் நிலை வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஸ்டீபன்ஸ் 6-1, 7-5 என வெற்றி பெற்றார்.

    7-ம் நிலை வீராங்கனை ஸ்விடோலினா, 15-ம் நிலை வீராங்கனை மெர்ட்டென்ஸ், 12-ம் நிலை வீராங்கனை முகுருசா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்க்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. #RogersCup #Serena
    டென்னிஸ் அரங்கில் கொடிகட்டி பறந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பரிடம் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    என்றாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தை பெற்ற பிறகு, சுமார் 9 மாதத்திற்குள் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பி, இறுதிப் போட்டி வரை முன்னேறியதை அனைவரும் பாராட்டினார்கள்.



    அடுத்து அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விம்பிள்டன் வெற்றி அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஓபனுக்கு தயாராகும் வகையில் கனடாவின் மான்ட்ரியலில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கும் ரோஜர்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தார்.

    கடந்த நான்கு வருடங்களாக ரோஜர்ஸ் கோப்பையில் விளையாடாத செரீனாவிற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்கியுள்ளனர்.
    உலக டென்னிஸ் தரவரிசையில் விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார். #SerenaWilliams
    லண்டன்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-வது இடத்தில் தொடருகிறார். குரோஷியா வீரர் மரின் சிலிச் 2 இடம் சரிந்து 7-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடமும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் சறுக்கி 9-வது இடமும், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செர்பியா வீரர் ஜோகோவிச் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடமும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், விம்பிள்டன் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6 இடம் முன்னேறி 4-வது இடமும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5-வது இடமும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-வது இடமும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 4 இடம் சரிந்து 7-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 8-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 9-வது இடமும், ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜெஸ் 3 இடம் முன்னேறி 10-வது இடமும் பிடித்துள்ளனர். விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார்.  #SerenaWilliams  #Tamilnews
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். #Serena #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



    2-வதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெஸ் - 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினார்கள்.



    இதில் எந்தவித சிரமமின்றி செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் - செரீனா வில்லியம்ஸ் சனிக்கிழமை (ஜூலை 14-ந்தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ×