search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை வெற்றி"

    ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தி, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. #Russia #WorldFirstFloating #NuclearPowerPlant
    மாஸ்கோ:

    ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தது. இதில் வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Russia #WorldFirstFloating #NuclearPowerPlant 
    முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘பினாகா’ ராக்கெட் சோதனை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. #PinakaRocket
    ஜெய்ப்பூர்:

    முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘பினாகா’ ராக்கெட் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இச்சோதனை நடந்தது. இலக்கை துல்லியமாக தாக்கியது.

    பினாகா ராக்கெட், வழிகாட்டும் வசதிகள் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்பு உள்பட மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்டது ஆகும்.  #PinakaRocket 
    25 மில்லியன் யூரோ செலவில் புனரமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது. #WorldBiggestAircraft
    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017-ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

    அதன் பின்னர் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது 25 மில்லியன் யூரோ செலவில் ஆகாய கப்பல் புனரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏர்லேண்டர் ஆகாய கப்பல் நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

    இதையடுத்து ஆகாய கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. #WorldBiggestAircraft 
    அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். #PrithviMissile
    புவனேஷ்வர்:

    பிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று இரவு நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. #PrithviMissile
    ×